Kuthiraivali Payasam Recipe : எலும்பை வலுவாக்கும் குதிரைவாலி அரிசி தெரியுமா? சுவையான குதிரைவாலி பாயாசம் செய்வது எப்படி?
Kuthiraivali Payasam : உடல் வலிமைக்கு தானியங்கள் சிறந்த நன்மைகளை வழங்குகின்றனர். இத்தகைய தானியங்கள் ஆதி காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.சுவையான குதிரைவாலி பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சிறந்த நன்மைகளை தருவது தானியங்கள் ஆகும். இத்தகைய தானிய உணவுகளை சிலர் விரும்புவதில்லை. உடல் வலிமைக்கு நவ தானியங்கள் சிறந்த நன்மைகளை வழங்குகின்றன. இத்தகைய நவ தானியங்கள் ஆதி காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. இந்த வரிசையில் எழும்புக்கு வலு அளிக்கும் குதிரைவாலி தானியத்தில் அனைவரும் விரும்பும் வண்ணம் சுவையான பாயாசம் செய்வதை காணலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் குதிரைவாலி அரிசி, அரை லிட்டர் பால், அரை கப் தேங்காய் பால், 1 கப் வெல்லம் , சிறிதளவு நெய், 5 அல்லது 6 முந்திரி பருப்புகள், உலர்ந்த திரட்சைகள், சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளை வேண்டும்.
பாயாசம் செய்ய தேவையான பொருட்களை ப்ரஷாக வாங்கி வைதுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பாயசத்தின் சுவை அருமையானதாக இருக்கும்.
செய்முறை
முதலில் 1 கப் குதிரைவாலி அரிசியை குக்கரில் வேகவைத்து 1 அல்லது 2 விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வெல்லப்பாகு தயாரிக்க வேண்டும். பின்னர் பாலை கொதிக்க வைத்து அதில் வேக வைத்த குதிரைவாலி அரிசியையும், வெல்லப்பாகையும் செத்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் பால், ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். நல்ல கொதிநிலயில் பாயாசயத்தை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வதக்கி அதனை பாயாசத்தில் போட வேண்டும். சூடான, சுவையான பாயாசம் தயார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதனை குடிக்கலாம்.
குதிரைவாலி அரிசியின் பயன்கள்
குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் எலும்பு வலு பெரும். வயது முதிர்ந்தவர்கள் இதனை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து இருப்பதால் நாள்பட்ட மலசிக்கல் தொந்தரவுகளை சரிபடுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை சாப்பிடலாம். இதில் குறைவான கலோரிகள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் குளுக்கோஸ் அளவை கட்டுபடுத்த குதிரைவாலியை சாப்பிடலாம்.
சிறுநீர் பிரச்சனைகள், இதய ஆரோக்கியம் என பலதரப்பட்ட நோய்களுக்கு நிவாராணியாக குதிரைவாலி பயன்படுகிறது. இதில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை உடலின் ரத்த அழுத்ததை சீராக்க உதவுகின்றன. குழந்தைகளுக்கும் அவர்களது வளர்ச்சியில் மிகவும் பயனுள்ளதாக குதிரைவாலி உள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்