ரோட்டுக்கடை ஸ்டைலில் பாவ் பாஜி செய்வது எப்படி? வீட்டிலேயே செய்ய மாஸ் ரெசிபி உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரோட்டுக்கடை ஸ்டைலில் பாவ் பாஜி செய்வது எப்படி? வீட்டிலேயே செய்ய மாஸ் ரெசிபி உள்ளே!

ரோட்டுக்கடை ஸ்டைலில் பாவ் பாஜி செய்வது எப்படி? வீட்டிலேயே செய்ய மாஸ் ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil
Nov 10, 2024 11:15 AM IST

. வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த ரோட்டுக்கடை ரெசிபிகளை மிகவும் அதிகமாக விரும்புவர். அவ்வாறான ஒரு உணவு தான் பாவ் பாஜி, இதனை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். ரோட்டுக்கடை ஸ்டைலில் பாவ் பாஜி செய்யும் எளிய முறையை இங்கு காணலாம்.

ரோட்டுக்கடை ஸ்டைலில் பாவ் பாஜி செய்வது எப்படி? வீட்டிலேயே செய்ய மாஸ் ரெசிபி உள்ளே!
ரோட்டுக்கடை ஸ்டைலில் பாவ் பாஜி செய்வது எப்படி? வீட்டிலேயே செய்ய மாஸ் ரெசிபி உள்ளே! (Motions and Emotions)

தேவையான பொருட்கள்

3 உருளைக்கிழங்கு

2 கேரட்

 10 பீன்ஸ்

4 தக்காளி

3 வெங்காயம்

1 குடை மிளகாய்

1 லெமன்

4 பாவ் பன் 

சிறிதளவு பாவ் பாஜி மசாலா 

சிறிதளவு மிளகாய் தூள் 

தேவையான அளவு வெண்ணெய்

1 துண்டு இஞ்சி

2 பல் பூண்டு

தேவையான அளவு எண்ணெய் 

தேவையான அளவு உப்பு 

சிறிதளவு கொத்தமல்லி 

செய்முறை 

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காய்கறிகளை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில்  வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். பின் அதில் நறுக்கிய குடை மிளகாயை போட்டு வதக்கவும். மேலும் அதில் நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், சிறிதளவு பாவ் பாஜி மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். இப்பொழுது இந்த கலவையுடன் மசித்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அதில் ஒரு கை அளவு கொத்தமல்லியைத் தூவி பின்பு ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்கு கிளறி விடவும்.

இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக வரும் வரை காய விடவும். பின் இதில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 சிறிதளவு வெண்ணெய் ஊற்றி அதை உருக விடவும். வெண்ணெய் உருகியதும் அதில் பாவ் பன்னை இரண்டாக வெட்டி அதில் போட்டு சிவந்ததும் மறு புறம் திருப்பி போட்டு எடுக்கவும். பின்பு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பிங் பாஜியை 2 பன்களுக்கு நடுவில் வைத்து பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டியான பாவ் பாஜி தயார்.இது ரோட்டுக்கடை ஸ்டைலில் தயாரான சுவையான பாவ் பாஜி ஆகும். இதனை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இது உகந்த ஒரு சுவையான உணவாகும். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.