ரோட்டுக்கடை சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி? இப்போவே தெரிஞ்சுக்க இதோ ஈசி ரெசிபி!
ரோட்டுக்கடைகளில் செய்யப்படும் அதே சுவையை நம்மாலும் கொண்டு வர முடியும். வீட்டிலேயே ரோட்டுக்கடை ஸ்டைலில் சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
வீட்டில் வித விதமாக உணவுகள் செய்து கொடுத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் காரணமாக வயிற்று தொந்தரவுகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. எனவே வெளியில் செய்து தரப்படும் உணவுகள் ஸ்டைலில் வீட்டிலும் சமையல் செய்யலாம். ரோட்டுக்கடைகளில் செய்யப்படும் அதே சுவையை நம்மாலும் கொண்டு வர முடியும். வீட்டிலேயே ரோட்டுக்கடை ஸ்டைலில் சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு பெரிய நூடுல்ஸ் பாக்கெட்
ஒரு பெரிய சைஸ் முட்டைக்கோஸ்
1 பெரிய வெங்காயம்
1 கேரட்
அரை கப் சிவப்பு குடை மிளகாய்
அரை கப் பச்சை குடை மிளகாய்
சிறிதளவு வெள்ளை வெங்காயம்
சிறிதளவு ஸ்ப்ரிங் ஆனியன்
2 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
2 டேபிள்ஸ்பூன் வினிகர்
1 டேபிள்ஸ்பூன்டி கிரீன் சில்லிசாஸ்
1 டேபிள்ஸ்பூன்ரெட் சில்லி சாஸ்
2 பல் பூண்டு
1 பச்சை மிளகாய்
1 டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும். அதன் உடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக விட வேண்டும். எண்ணெய் ஊற்றி வேக வைக்கும் போது நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனியாக இருக்கும் பின்னர் நூடுல்ஸ் முக்கால் பதத்திற்கு வெந்ததும், அதனை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்காவவும். எண்ணெய் சூடானதும், அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
இது நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், வெள்ளை வெங்காயம், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பிறகு அதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு நன்கு கிளறவும். இவை அனைத்தும் நன்றாக கலக்கும் வரை கிளறவும். நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை கெட்சப் உடன் பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். இவ்வாறு செய்து கொடுப்பதன் மூலம் கடைகளில் விற்கப்படும் சுகாதாரம் இல்லாத உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க முடியும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
டாபிக்ஸ்