வடை செய்ய இனி உளுந்து தேவையில்லை! உளுந்தே இல்லாமல் வடை செய்வது எப்படி? மாஸ் ரெசிபி!
இனி வடை செய்வதற்கு உளுந்த மாவை ஊற வைத்து ஆட்டி எடுக்க தேவையில்லை. உளுந்து இல்லாமலேயே மெது வடை செய்யலாம். வீட்டிலேயே மென்மையான மெது வடை செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
இந்தியாவில் முதன்மையான சிற்றுண்டி உணவாக வடை இருந்து வருகிறது. காலை மாலை என அனைத்து வேளைகளிலும் சாப்பிட வடை ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். மேலும் வடையில் பல வகைகள் உள்ளன. பருப்பு வடை, உளுந்த வடை மற்றும் வெங்காய வடை என ஆகியவை இதில் பெரும்பாலும் சாப்பிடும் வடையாக இருக்கிறது. தென் இந்தியா முழுவதும் வடை மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. கடைகளில் வாங்கி சாப்பிடும் வடைகள் சில சமயங்களில் சுத்தம் இல்லாத எண்ணெயில் செய்தவையாக இருக்கும். எனவே வீட்டில் வடை செய்து சாப்பிடுவது சிறந்த ருசியை தரும். இனி வடை செய்வதற்கு உளுந்த மாவை ஊற வைத்து ஆட்டி எடுக்க தேவையில்லை. உளுந்து இல்லாமலேயே மெது வடை செய்யலாம். வீட்டிலேயே மென்மையான மெது வடை செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் பச்சரிசி மாவு
1 கப் மோர்
சிறிதளவு இஞ்சி
4 பச்சை மிளகாய்
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு கொத்து கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
ஒரு பெரிய வெங்காயம்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பச்சரிசி மாவு, மோர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான தீயில் இந்த மாவு கலவையை போட்டு கெட்டி ஆகமால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்துவைத்துக்கொள்ள வேண்டும். இப்போது வடை மாவு பதத்திற்கு வந்து விட வேண்டும். இதனை சற்று ஆற விட வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து வடை சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்க வேண்டும். எண்ணெய் நன்கு சூடான பின்பு நாம் கலந்து வைத்த மாவை ஒரு இலையை எடுத்து வடை போல் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். இரு புறமும் நன்கு வெந்த பின்னர் வடையை எடுத்து ஒரு எண்ணெய் வடியும் வரை அப்படியே விட வேண்டும். எண்ணெய் வடிந்ததும் வடையை எடுத்து சாப்பிடலாம். சுவையான மொறு மொறு மெது வடை தயார். இதனை வீட்டில் உள்ள அணைவருக்கும் கொடுத்தால் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். மேலும் விசேஷ நாட்களிலும் வடை செய்யும் போது உடனடியாக இந்த வடையை செய்து கொடுங்கள். இது ஒரு சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும்.
வடை மாலை நேர டீயுடன் சேர்த்து சாப்பிட வடை நல்ல சிற்றுண்டி ஆகும். மேலும் இதனை யார் வேண்டுமானாலும் எளிதாக செய்ய முடியும். நீங்களும் உங்களது வீட்டில் செய்து பார்த்து கொடுத்து பாருங்கள். எல்லாருக்கும் நிச்சயமாக பிடிக்கும். அரிசி மாவில் மெது வடை செய்வது ஒரு சிறந்த முறையாகும்.
டாபிக்ஸ்