சூடான இட்லிக்கு சுவையான நெல்லி-மல்லி-சில்லி சட்னி! ஒரே மாதிரியில்லாமல் புதுவித ருசியில் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சூடான இட்லிக்கு சுவையான நெல்லி-மல்லி-சில்லி சட்னி! ஒரே மாதிரியில்லாமல் புதுவித ருசியில் அசத்தும்!

சூடான இட்லிக்கு சுவையான நெல்லி-மல்லி-சில்லி சட்னி! ஒரே மாதிரியில்லாமல் புதுவித ருசியில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Nov 12, 2024 12:09 PM IST

சூடான இட்லிக்கு சுவையான நெல்லிக்காய்ச் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒரே மாதிரியில்லாமல் புதுவித ருசியில் அசத்தும் சுவை நிறைந்தது.

சூடான இட்லிக்கு சுவையான நெல்லிக்காய்ச் சட்னி! ஒரே மாதிரியில்லாமல் புதுவித ருசியில் அசத்தும்!
சூடான இட்லிக்கு சுவையான நெல்லிக்காய்ச் சட்னி! ஒரே மாதிரியில்லாமல் புதுவித ருசியில் அசத்தும்!

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.

உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.

இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

தேங்காய் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – 5 பற்கள்

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

நெல்லிக்காய் – 3 (விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 2

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, பூண்டு, புளி, உப்பு, நெல்லிக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல சட்னி பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வர மிளகாய் சேர்த்து பொரியவிட்டு, சட்னியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கலந்துவிட்டால் சூப்பர் சுவையான நெல்லிக்காய் சட்னி தயார்.

இதை இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். உடலுக்கும் எண்ணற்ற நன்மைகளை நெல்லிக்காய் வழங்கும் என்பதால் இந்தச் சட்னியை கட்டாயம் செய்து சாப்பிடுங்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.