சாஃப்ட் சப்பாத்தி! சூப்பர் சைடிஷ் தக்காளி தொக்கு! ஈசியா செய்யல்லாம்! மாஸ் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாஃப்ட் சப்பாத்தி! சூப்பர் சைடிஷ் தக்காளி தொக்கு! ஈசியா செய்யல்லாம்! மாஸ் ரெசிபி!

சாஃப்ட் சப்பாத்தி! சூப்பர் சைடிஷ் தக்காளி தொக்கு! ஈசியா செய்யல்லாம்! மாஸ் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Dec 11, 2024 11:52 AM IST

மென்மையான சப்பாத்தி செய்யவும், அதற்கு ருசியான தக்காளி தொக்கு செய்யவும் தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

சாஃப்ட் சப்பாத்தி! சூப்பர் சைடிஷ் தக்காளி தொக்கு! ஈசியா செய்யல்லாம்! மாஸ் ரெசிபி!
சாஃப்ட் சப்பாத்தி! சூப்பர் சைடிஷ் தக்காளி தொக்கு! ஈசியா செய்யல்லாம்! மாஸ் ரெசிபி! (Traditionally Modern Food)

தேவையான பொருட்கள்

2 கப் கோதுமை மாவு

4 பெரிய வெங்காயம்

5 தக்காளி

2 பச்சை மிளகாய்

3 பூண்டு பல்

1 இஞ்சி துண்டு

2 டேபிள்ஸ்பூன் மல்லி தூள்

அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

அரை டேபிள்ஸ்பூன் சீரகம்

1டேபிள்ஸ்பூன் கடுகு

தேவையான அளவு மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு கறிவேப்பிலை

செய்முறை

முதலில் ஒரு கடாயை  அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் கடுகு,சீரகத்தை போட்டு வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். மேலும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளியை நன்கு வதக்கவும்.  பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு வேக விடவும். பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

சாஃப்ட் சப்பாத்தி

இப்பொழுது 2 கப் அளவு கோதுமை மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி கிளறவும். பின்பு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவை பிசையவும். மாவு நன்கு மிருதுவான பதம் வரும் வரை அதை பிசையவும். மாவு தொட்டால் கைகளில் ஒட்டக்கூடாது அப்படி ஓட்டினால் அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அதனால் அதில் சிறிதளவு மாவை தூவி பிசைந்து கொள்ளவும். மாவை பிசைந்து முடித்ததும் அதன் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு அதை ஊற விடவும்.20 நிமிடங்கள் பின்னர் மாவை எடுத்து சிறு துண்டுகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் மாவை தேய்த்து சப்பாத்தி அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சப்பாத்தி கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில்  எண்ணெய் ஊற்றி தேய்த்து வைத்திருந்த மாவுகளை அதில் போட்டு வேக விட்டு எடுக்கவும்.  பிறகு அதை மீண்டும் திருப்பி போட்டு சப்பாத்தி நன்கு உப்பி வரும் வரை வேக விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறே மீதமுள்ள அனைத்து சப்பாத்திகளையும் போட்டு எடுத்து க் கொள்ள வேண்டும். இப்பொழுது மென்மையான சப்பாத்தி மற்றும் அதற்கு சுவையான தக்காளி தொக்கு தயார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.