சுவையான பரோட்டா சால்னா! இனி வீட்டிலேயே செய்யலாமே! இதோ ஈஸியான ரெசிபி! செஞ்சு அசத்துங்க!
நாமே வீட்டிலயே பரோட்டா செய்து சாப்பிட வேண்டும். இந்த பரோட்டாவிற்கு கடைகளில் செய்யப்படும் சால்னாவை போல சுவையான சால்னா நாமே வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியம். சுவையான சாலனாவை வீட்டிலேயே செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதில் காண்போம்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் விரும்பி சாப்பிடு உணவாக பரோட்டா இருந்து வருகிறது. கடைகளில் பரோட்டா வாங்கி சாப்பிட்டால் தான் அந்த நாள் நிறைவடையும் எனவும் பலர் நினைக்கின்றனர். அந்த அளவிற்கு பரோட்டா மீது பலருக்கு பிரியம் உள்ளது. கடைகளில் வாங்கும் பரோட்டா சில சமயங்களில் மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் எண்ணெயில் போட வாய்ப்புண்டு எனவே நாமே வீட்டிலயே பரோட்டா செய்து சாப்பிட வேண்டும். இந்த பரோட்டாவிற்கு கடைகளில் செய்யப்படும் சால்னாவை போல சுவையான சால்னா நாமே வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியம். சுவையான சாலனாவை வீட்டிலேயே செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ள இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
15 சின்ன வெங்காயம்
4 டீஸ்பூன் ஊறவைத்த கசகசா
10 ஊறவைத்த முந்திரி
1 டீஸபூ ஊறவைத்த சோம்பு
அரை மூடி தேங்காய்
1 டீஸ்பூன் பட்டை மிளகு
3 ஏலக்காய்
2 கிராம்பு
தேவையான் அளவு தண்ணீர்
சால்னா செய்ய
250 மிலி எண்ணெய்
பட்டை கிராம்பு
ஏலக்காய்
ஜாவித்ரி
அன்னாசிப்பூ
கல்பாசி
பிரியாணி இலை
3 பெரிய வெங்காயம்
3 பச்சை மிளகாய்
சிறிதளவு கறிவேப்பிலை
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
4 தக்காளி
தேவையான அளவு உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்
2 டீஸ்பூன் மல்லித்தூள்
அரைத்த மசாலா விழுது
புதினா இலை
கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் சால்னா செய்வதற்குத் தேவையான் மசாலா விழுது அரைக்க வேண்டும். அதற்கு மிக்ஸியில் சின்ன வெங்காயம், ஊறவைத்த கசகசா, முந்திரி, சோம்பு மற்றும் தேங்காய், பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைத்து எடுக்க வேண்டும். பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்ரி, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து வறுக்கவும். மேலும் இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விடவும். பின்பு இதில் நைசாக அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
பின்னர் இதில் தேவையான் அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இதில் நாம் அரைத்த மசாலா விழுது சேர்த்து கலந்து விட்டு மசாலா தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். பிறகு இதில் பொடியாக நறுக்கிய புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்பு உப்பு சேர்த்து கலந்து விடவும். குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். இப்பொழுது அட்டகாசமான பரோட்டா சால்னா தயார். இதனை நீங்களே உங்கள் வீடுகளில் செய்து பார்த்து அசந்துங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
டாபிக்ஸ்