மறுசுழற்சி செய்யப்பட்டு பயனுள்ள பொருளாக மாற்றப்படும் சிகரெட் துண்டுகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மறுசுழற்சி செய்யப்பட்டு பயனுள்ள பொருளாக மாற்றப்படும் சிகரெட் துண்டுகள்!

மறுசுழற்சி செய்யப்பட்டு பயனுள்ள பொருளாக மாற்றப்படும் சிகரெட் துண்டுகள்!

Jul 18, 2022 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 18, 2022 08:40 PM IST

  • ப்ளாஸ்டிக் பை, ஸ்ட்ரா, கவர்கள் இவற்றையெல்லாம் காட்டிலும் அதிகமாக மாசு ஏற்படுத்தும் பொருளாக சிகரெட் துண்டுகள் உள்ளது. "சிகரெட் புகைப்பவர்கள் முழுவதும் புகை பிடித்த பின்னர் மேற்பகுதியில் இருக்கும் சிகரெட் துண்டுகள் அப்படியே கீழே போட்டுவிடுகிறார்கள். இதில் இடம்பெற்றிருக்கும் பிளாஸ்டிக் கலவை சுற்றுப்புறத்துக்கு மிகப் பெரிய அளவில் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. உலகம் முழுவதும் 18 பில்லியன் அளவு சிகரெட் துண்டுகள் நாள்தோறும் கீழே வீசப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயமாக ஒரு சிகரெட் துண்டு 500 லிட்டர் அளவு தண்ணீரை மாசுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை பற்றி பெரிதாக கவலைபடாமல் அலட்சியமாக இருக்கிறோம்" என்று கூறும் புரொஜெக்ட் லெகர் என்ற அமைப்பை சேர்ந்த ஒசில். இவர் தனது நண்பர்களோடு இணைந்து புரொஜெக்ட் லெகர் மூலம் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். என்ஜிஓ அமைப்பாக செயல்பட்டு வரும் இதில், 1000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்கள் தில்ல மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கீழே போடப்பட்டிருக்கும் சிகரெட் துண்டுகளை எடுத்து அதை மறுசுழற்சியும் செய்கின்றனர். இவை தொழில்ரீதியாக சுத்தப்படுத்தப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. காமா கதிர்கள் செலுத்தப்பட்டு அதில் இருக்கும் கழிவுகள் நீக்கப்பட்டு, அதன் வாசனை மட்டுப்படுத்தப்பட்டு, அந்த துண்டுகள் அனைத்து பானைகள் செய்யும் மணல்களில் கலக்கப்படுகிறது. மணல் சார்ந்த பொருள்கள் சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் நன்மை தருவதாக இருப்பதால், சிகரெட் துண்டுகளை பயண்படுத்த உகந்ததாக மாற்றி அதை பயண்படுத்தி வருகின்றனர்.

More