ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் சப்பாத்தி! இப்பவே செஞ்சு அசத்துங்க! மாஸ் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் சப்பாத்தி! இப்பவே செஞ்சு அசத்துங்க! மாஸ் ரெசிபி!

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் சப்பாத்தி! இப்பவே செஞ்சு அசத்துங்க! மாஸ் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Nov 22, 2024 03:11 PM IST

குழந்தைகள் பல சமயத்தில் சத்தான காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்ப்பது உண்டு. இது போன்ற நேரத்தில் அவர்களுக்கு பிடித்தவாறே உணவில் காய்கறிகளை சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் சப்பாத்தி! இப்பவே செஞ்சு அசத்துங்க! மாஸ் ரெசிபி!
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் சப்பாத்தி! இப்பவே செஞ்சு அசத்துங்க! மாஸ் ரெசிபி!

தேவையான பொருட்கள்

ஒரு பெரிய சைஸ் பீட்ரூட் 

2 கப் கோதுமை மாவு 

4 பச்சை மிளகாய்

1 துண்டு இஞ்சி

1 டீஸ்பூன் மிளகாய் தூள் 

1 டீஸ்பூன் கரம் மசாலா 

1 டீஸ்பூன் சீரகத்தூள் 

1 டீஸ்பூன் ஓமம் 

2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி 

அரை கப் எண்ணெய்

100 கிராம் நெய் 

தேவையான அளவு தண்ணீர்

தேவையான அளவு உப்பு 

செய்முறை

முதலில் பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், இஞ்சி துண்டு ஆகியவற்றை போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 கப் அளவுள்ள கோதுமை மாவை போட வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை போட்டு கிளற வேண்டும். பின்னர் இதில் மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், கஸ்தூரி மேத்தி, ஓமம் என எல்லா மசாலா பொருட்களையும் போட்டு கலக்கி கொள்ள வேண்டும். இந்த கலைவையில் நாம் அரைத்து வைத்திருந்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசைய வேண்டும். நீண்ட நேரம் பிசைய வேண்டும். 

இந்த மாவை எண்ணெய் தடவி அப்படியே ஊற வைக்க வேண்டும். இவை நன்கு ஊறிய பின்னர் இதில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டிக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து சப்பாத்தி அளவிற்கு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து  நெய் ஊற்றி சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் தேயத்து வைத்துள்ள சப்பாத்தி மாவுகளை கடாயில் போட்டு வேக விட வேண்டும். சப்பாத்திகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றியவுடன், சப்பாத்தியின் மீது சிறிது நெய் தடவவும். சப்பாத்தி முழுவதுமாக வெந்ததும், கடாயில் இருந்து இறக்கவும். அவ்வளவுதான், ஆரோக்கியமான மற்றும் சுவையான பீட்ரூட் சப்பாத்திகள் உங்களுக்கு விருப்பமான எந்த சைட் டிஷுடனும் சூடாகவும் அருமையாகவும் பரிமாற தயாராக உள்ளன. இதனை செய்து கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு அதிக சத்து மிக்க பீட்ரூட்டை சாப்பிட வைக்க முடியும். இதே சப்பாத்தியை காரட் வைத்தும் செய்யலாம். சாப்பிடுவதற்கும்  சுவையாக இருக்கும். இதை செய்து பாருங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.