Kozhukattai Recipe : விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை.. இந்த மாதிரி செய்து கொடுங்க.. செம ருசியா இருக்கும்!
Kozhukattai Recipe : விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை கொஞ்சம் வித்தியாசமாக இந்த முறை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க. விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
திணிப்பு:
பச்சைப்பயறு பருப்பு 1 கப்
தேங்காய் 1 கப்
வெல்லம் தூள் 1 கப்
நெய் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் 1/4 டீஸ்பூன்
இஞ்சி தூள் 1/4 டீஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு
மோடக்
அரிசி மாவு 1 கப்
கேரட் 2
தண்ணீர் 2 கப்
உப்பு 1/4 டீஸ்பூன்
செய்முறை
விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை கொஞ்சம் வித்தியாசமாக இந்த முறை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு கப் பச்சை பயிரை 3 மணி நேரம் ஊற வைத்து இரண்டு விசில் வைத்து நன்கு வேக வைக்கவும்.
கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம்
பச்சைப்பயிர் நன்கு வெந்ததும் அதனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். பச்சைப்பயிறுடன் ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் வெல்லம் சிம்மில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், நெய் சிறிது, அரை ஸ்பூன் சுக்கு பொடி, அறச்சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது நமக்கு கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் ரெடி.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு கேரட்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கேரட்டை அரைத்து அதில் உள்ள ஜூசை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கெட்டியாக வரும் வரை கிண்டவும்
அந்த ஜூஸில் கால் ஸ்பூன் உப்பு போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் கொழுக்கட்டை மாவை கேரட் ஜூஸில் போட்டு நன்கு கெட்டியாக வரும் வரை கிண்டவும். கொழுக்கட்டை பதத்திற்கு மாவு வரவேண்டும். அந்த அளவிற்கு நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
நெய் தொட்டு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த மாவை உருண்டையாக பிடித்து உங்களுக்கு பிடித்த கொழுக்கட்டை வடிவத்தில் அந்த மாவை சேர்த்து பூரணத்தை உள்ளே வைத்து சீல் செய்து விடுங்கள்.
மிகவும் ஆரோக்கியமான கொழுக்கட்டை
அனைத்தையும் சரி செய்து வைத்து 10 நிமிடம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்தால் உங்களுக்கு சுவையான கொழுக்கட்டை ரெடி. இந்த கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில் நம் பச்சைப் பயிறு. வெல்லம், கேரட் இவை அனைத்தையும் இதில் நாம் சேர்த்துள்ளதால் இதில் நன்மைகளும் அதிகம்.
மிகவும் ஆரோக்கியமான இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைத்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுங்கள் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள் வித்தியாசமான சுவையாகவும் இருக்கும்.
இதையும் படிங்க : Cucumber Pachadi : ஆரோக்கியம், கழிவு நீக்கம், குளிர்ச்சி என உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் வெள்ளரிக்காய் பச்சடி!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்