Vazhaipoo Biryani : வாழைப்பூ பிரியாணி செய்யலாமா? அதுவும் செம ஈஸியா.. இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க.. டேஸ்ட் அள்ளும்!-how to make tasty banana flower biryani recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vazhaipoo Biryani : வாழைப்பூ பிரியாணி செய்யலாமா? அதுவும் செம ஈஸியா.. இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க.. டேஸ்ட் அள்ளும்!

Vazhaipoo Biryani : வாழைப்பூ பிரியாணி செய்யலாமா? அதுவும் செம ஈஸியா.. இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க.. டேஸ்ட் அள்ளும்!

Divya Sekar HT Tamil
Aug 29, 2024 01:38 PM IST

Banana flower Biryani : வாழைப்பூ பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். அதே போல வாழைப்பூ ரைத்தா எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

வாழைப்பூ பிரியாணி செய்யலாமா? அதுவும் செம ஈஸியா.. இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க.. டேஸ்ட் அள்ளும்!
வாழைப்பூ பிரியாணி செய்யலாமா? அதுவும் செம ஈஸியா.. இதோ இந்த மாதிரி செய்து கொடுங்க.. டேஸ்ட் அள்ளும்!

வாழைப்பூ (2 கைப்பிடி)

எண்ணெய் (2 தேக்கரண்டி)

நெய் (1 தேக்கரண்டி)

வெங்காயம் (1)

இலவங்கப்பட்டை (சிறிய துண்டு)

ஏலக்காய் (2)

கிராம்பு (2)

வளைகுடா இலை (1)

தக்காளி (1)

இஞ்சி பூண்டு விழுது (1 தேக்கரண்டி)

மிளகாய் தூள் (1 தேக்கரண்டி)

கொத்தமல்லி தூள் (1/2 தேக்கரண்டி)

மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி)

உப்பு (1 தேக்கரண்டி)

தயிர் (1 டீஸ்பூன்)

புதினா இலைகள்

வாழைப்பூ ரைத்தா

வாழைப்பூ (மொட்டுக்குள்)

தயிர்

வெங்காயம்

துருவிய தேங்காய்

உப்பு

மாதுளை

கொத்தமல்லி இலைகள்

செய்முறை

வாழைப்பூ பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். முதலில் வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள நரம்புகளை நன்றாக அகற்றி விடுங்கள். பின்னர் அந்த வாழைப்பூவை தயிரில் போட்டு ஊற வைக்கவும். ஏனென்றால் தயிரில் போட்டால் வாழைப்பூ கருக்காது அதேசமயம் துவக்கமும் செய்யாது. அதனால் தயிரில் போடுவது நல்லது.

இப்போது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் அதன் பிரியாணிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடுங்கள்

பின்னர் அதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து, தோலை உரித்த பலாக்கொட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தூள், கால் டீஸ்பூன் மஞ்சத்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, மல்லி தலை சேர்த்து வதக்கி விட்டு மூடி வைத்து விடுங்கள். இப்போது அந்த பலாக்கொட்டை நன்கு வேகம் அளவிற்கு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடுங்கள்.

பலாக்கொட்டை நன்கு வெந்தயம் நாம் சுத்தம் செய்து நறுக்கி வைத்து தயிரில் ஊற வைத்த வாழைப்பூவை எடுத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை சேர்த்தவுடன் ஒரு கப் பாஸ்மதி ரைஸ் 10 நிமிடம் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அரிசிக்கு இரண்டே கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மேலே ஒரு வெயிட்டான பொருளை வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக விடுங்கள்.

வாழைப்பூ ரைத்தா

இப்போது பிரியாணிக்கு ரைத்தா எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். நாம் எப்பொழுதும் வாழைப்பூவை சுத்தம் செய்யும் பொழுது கடைசியாக இருக்கும் குட்டி பூவை தூக்கி எறிவது உண்டு. ஆனால் அந்த பூவை வைத்து நீங்கள் ரைத்தா செய்யலாம்.

வாழைப்பூவை எடுத்து குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளுங்கள் பின்னர் அதில் தயிர் வெங்காயம் துருவிய தேங்காய் உப்பு மாதுளை கொத்தமல்லி இலை சேர்த்து ரைத்தாவை தயார் செய்யுங்கள் இதனை பிரியாணி உடன் வைத்து சாப்பிடும்போது அருமையாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.