Kayal serial: ஒன்று கூடிய குடும்பம்.. தக்காளியான தர்மலிங்கம்.. சதி திட்டம் தீட்டிய சங்கரி - கயல் சீரியலில் இன்று!-sun tv kayal serial today latest episode promo on august 28 th and 2024 dharmalingam shocked kayal reaction - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: ஒன்று கூடிய குடும்பம்.. தக்காளியான தர்மலிங்கம்.. சதி திட்டம் தீட்டிய சங்கரி - கயல் சீரியலில் இன்று!

Kayal serial: ஒன்று கூடிய குடும்பம்.. தக்காளியான தர்மலிங்கம்.. சதி திட்டம் தீட்டிய சங்கரி - கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 29, 2024 01:06 PM IST

Kayal serial: கயல் கல்யாணத்திற்கான புடவைகளை எடுத்துக்கொண்டு, தொழிலாளி பார்சலுக்கு கொண்டு செல்லும் பொழுது, சிவசங்கரி ஏதோ திட்டம் தீட்டி, அதில் ஒரு சதி செய்து விட்டாள். - கயல் சீரியலில் இன்று!

Kayal serial: ஒன்று கூடிய குடும்பம்.. தக்காளியான தர்மலிங்கம்..  சதி திட்டம் தீட்டிய சங்கரி - கயல் சீரியலில் இன்று!
Kayal serial: ஒன்று கூடிய குடும்பம்.. தக்காளியான தர்மலிங்கம்.. சதி திட்டம் தீட்டிய சங்கரி - கயல் சீரியலில் இன்று!

தொடர்ந்து கயல் கல்யாணத்திற்கான புடவைகளை எடுத்துக்கொண்டு, தொழிலாளி பார்சலுக்கு கொண்டு செல்லும் பொழுது, சிவசங்கரி ஏதோ திட்டம் தீட்டி, அதில் ஒரு சதி செய்து விட்டாள். அதை நினைத்து அவள் சந்தோஷப்பட்டு கொண்டு, இதுதான் நீ கடைசியாக சந்தோஷப்படக்கூடிய நேரம் என்று கயலை பார்த்து, மனதிற்குள் சொல்லிக்கொள்கிறாள். அத்துடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது. 

கயல் சீரியலில் நேற்று நடந்தது என்ன? 

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜலட்சுமியின் கட்டளைக்கு இணங்க, தர்மலிங்கமும் வடிவும் அவளுடைய கடைக்கு வந்தார்கள். அங்கே கயல் திருமணத்திற்கு வேதவள்ளி உட்பட அனைவரும் மும்முரமாக ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து, அவர்கள் காத்திருந்தார்கள். 

இவர்களைப் பார்த்த மூர்த்தி, அவர்களை உள்ளே அழைக்க அவர்கள் தாங்கள் வரமாட்டோம் என்று அடம் பிடித்தார்கள். இதையடுத்து கயலும், காமாட்சியும் வந்தனர். இதற்கிடையே கயல் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே, நாங்கள் கல்யாண தொடர்பான வேலைகளில் கலந்து கொள்வோம் என்று வடிவு மறைமுகமாக சொன்ன நிலையில், கயல் அவர்களது காலில் விழப்போனாள். ஆனால் அப்போது அவளை  தடுத்த வடிவு, இன்னொரு இடத்தில், எல்லோர் முன்னிலையிலும் கயலை காலில் விழ வைக்க வேண்டும் என்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டு, மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும் என்றாள். 

இதனையடுத்து கயல் மன்னிப்பு கேட்டாள். தொடர்ந்து ராஜி அங்கே வர, அவள் கயலுக்கு எதிராக பேசுவாள் என்று பார்த்தால், அவள், கயலுக்கும் அவளது குடும்பத்திற்கும் ஆதரவாக பேசினாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்மலிங்கமும், வடிவும் அவளை தனியாக அழைத்துச் சென்று, உனக்கு என்ன ஆனது ஏன் திடீரென்று கயல் பக்கம் மாறி விட்டாய் என்று கேட்க, கயலுடைய கரிசனத்தால் தான் இன்று தன்னுடைய மகள் உயிரோடு இருக்கிறாள் என்ற விஷயத்தை அவள் உடைக்கிறார். 

கயலால் காப்பாற்றப்பட்ட மகள் 

இதையடுத்து இப்போது எல்லாம் தெரிந்து விட்டது அல்லவா நீங்கள் முன் நின்று கல்யாண வேலைகளை கவனியுங்கள் என்று ராஜி கூறினாள். இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கல்யாணத்திற்கு தங்களுக்கு எடுக்கப்படும் ஆடையின் விலையையாவது ஏத்தி விட வேண்டும் என்று நினைத்த வடிவு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு பட்டுப் புடவையை எடுத்தாள். இதை பார்த்த வேதவள்ளி, அவளே இரண்டு புடவைகளை எடுத்து வந்து, இந்த புடவைகளில் உங்களுக்கு எந்த புடவை நன்றாக இருக்கு பாருங்கள் என்று  வடிவை கேட்டதோடு மட்டுமல்லாமல், அதையே அவளை எடுக்குமாறும் செய்துவிட்டாள். இதை மறைந்திருந்து பார்த்த கயல், வேதவள்ளியை அம்மா என்று அழைத்ததோடு நன்றி கூறினாள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.