Soft Chapathi: சப்பாத்தி சாஃப்ட் ஆக செய்வது எப்படி? பக்கா டிப்ஸ் வேணுமா? அப்போ இத படிங்க!-how to make soft chapathi in proper ways - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soft Chapathi: சப்பாத்தி சாஃப்ட் ஆக செய்வது எப்படி? பக்கா டிப்ஸ் வேணுமா? அப்போ இத படிங்க!

Soft Chapathi: சப்பாத்தி சாஃப்ட் ஆக செய்வது எப்படி? பக்கா டிப்ஸ் வேணுமா? அப்போ இத படிங்க!

Suguna Devi P HT Tamil
Sep 21, 2024 07:22 PM IST

Soft Chapathi: இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் சப்பாத்தி பிரதான உணவாக இருந்து வருகிறது. அனைவரது வீட்டிலும் சப்பாத்தி செய்வது வழக்கமாகி விட்டது.

Soft Chapathi: சப்பாத்தி சாஃப்ட் ஆக சுடுவது எப்படி? பக்கா டிப்ஸ் வேணுமா? அப்போ இத படிங்க!
Soft Chapathi: சப்பாத்தி சாஃப்ட் ஆக சுடுவது எப்படி? பக்கா டிப்ஸ் வேணுமா? அப்போ இத படிங்க!

தேவையான பொருட்கள் 

அரை கிலோ கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், 3 டம்ளர் சுடு தண்ணீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு என்பது 15 முதல் 17 சப்பாத்திக்கான மாவு ஆகும். கூடுதலான சப்பாத்தி தேவைப்படும் போது அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். குறைந்த அளவிலும் செய்யலாம். 

 செய்முறை 

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சுடு தண்ணீர் விட்டு பிசைய ஆரம்பிக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். மேலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின்னர் மீண்டும் சுடு  தண்ணீரை சேர்த்து பிசைய வேண்டும்.  பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே ஊற விட வேண்டும்.  

அரை மணி நேரம் கழித்து, மீண்டும் ஒரு முறை பிசைந்து விட வேண்டும். பின்னர் மாவை சிறு சிறு தூண்டுகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சப்பாத்திக் கட்டையில் உருண்டையை வைத்து இரு பக்கமும் உருளை கட்டையால் தேக்க வேண்டும் இரு பக்கமும் வற மாவை பூசி தேக்க வேண்டும். கடாயில் சட்டி  வைத்தோ, இரும்பு கிரில் வைத்தோ தேய்த்த சப்பாத்தியை போட வேண்டும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிருதுவாக சுட்டு எடுக்கவும். சாஃப்ட் ஆன சுவையான சப்பாத்தி ரெடி. கிரேவி அல்லது குழம்பு உடன் சுவையாக சாப்பிடலாம்

முக்கிய குறிப்பு 

ஒரு கப் மாவுக்கு, அரை கப் வெது வெதுப்பான தண்ணீர் போதுமானதாக இருக்கும். மாவை பிசையும் போது முழுத் தண்ணீரையும் ஒரே முறையில் ஊற்ற கூடாது. சிறிது சிறிதாக ஊற்றி மாவை நன்றாக கலக்க வேண்டும். அப்போதுதான் மாவை சரியான பதத்தில் பிசைய முடியும். இப்படி செய்வதன் மூலம் மாவு இறுகி போகாமலும், அதிக தண்ணீரால் குழைந்து போகாமலும் பார்த்து கொள்ளலாம். 

மாவை குறைந்தது 30 நிமிடம் ஊற விட வேண்டும். ஏனெனில் அப்போது தான் சப்பாத்தி நன்றாக உப்பி வரும். நீண்ட நேரம் மாவை பிசைய வேண்டும், எவ்வளவு நேரம் பிசைய ஆகிறதோ அவ்வளவு மென்மையாக சப்பாத்தி வரும். மாவை உலராமல் இருக்க ஒரு ஈரத்துணியை கொண்டு முடி வைக்க வேண்டும்.  இந்த செயல் முறைகளை சரியாக பின்பற்றி சப்பாத்தி செய்யும் போது சாஃப்ட் ஆனா சப்பாத்தி கிடைப்பது உறுதியாகும். 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.