Wheat Appam : கடித்து சாப்பிட ருசியாய் குண்டு குண்டு கோதுமை அப்பம்! சூப்பரான மாலை நேர சிற்றுண்டி!
Wheat Appam : கடித்து சாப்பிட ருசியாய் குண்டு குண்டு கோதுமை அப்பம், சூப்பரான மாலை நேர சிற்றுண்டி!
பாரம்பரிய சுவை நிறைந்தது. குண்டு குண்டு கோதுமை அப்பம். மிருதுவாகவும், அதிக சுவை நிறைந்ததாவும் இருக்கும். இதை செய்வதற்கு மாவை தோசை மாவைவிட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கரைத்துக்கொள்ளவேண்டும். இதை மழை நேரத்தில் மாலை தேநீர் அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். கோதுமை எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். அதில் வழக்கமாக தோசை, சப்பாத்தி, பூரி என்று செய்து சாப்பிட போர் அடித்தால் இதுபோன்ற அப்பத்தை செய்து சாப்பிடலாம். இந்த ஸ்னாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு கடையில் எதுவும் வாங்கிக்கொடுக்காமல் இதுபோல் வீட்டில் செய்து கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதன் சுவையால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை – ஒரு கப்
பச்சரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
வெல்லம் – முக்கால் கப்
வாழைப்பழம் – 1 (மசித்தது)
தேங்காய் துருவல் – ஒரு கப்
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில தண்ணீரை சூடாக்கி அதில் வெல்லத்தை சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும். வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி தனியாக வைத்துவிடவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழங்கள், அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு கலந்து நன்றாக மசிக்கவேண்டும். இதை நீங்கள் கைகளாலோ அல்லது விஸ்க் வைத்து செய்தாலோ நல்லது.
சூடான வெல்லம் கரைத்த தண்ணீரையும் சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்மாக ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும். மாவை நன்றாக கரைத்துக்கொள்ளவேண்டும். அதில் கட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கரைத்த மாவை அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயை தாராளமாக சேர்த்து சூடாக்கி, அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவேண்டும். இந்த அப்பங்களை இருபுறமும் நன்றாக வேபவைக்கவேண்டும். நல்ல பிரவுன் நிறத்தில் இது இருக்கவேண்டும். சூடான மற்றும் சுவையான அப்பம் பரிமாற தயாராக உள்ளது.
இதை நீங்கள் மாலை நேரத்தில் காபி அல்லது தேநீருடன் பரிமாறலாம் அல்லது பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கடித்து சாப்பிட ஏதுவாக இருப்பதால், பல் இல்லாத வயோதிகர்களுக்கும் ஏற்ற ஒன்றாக இந்த கோதுமை அப்பம் இருக்கும்.
கோதுமையின் நன்மைகள்
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.
ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்தது.
ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
நீண்ட கால அலர்ஜியை குறைக்கிறது.
மனஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய நோய் ஆபத்தை குறைக்கிறது.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.
மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அறிகுறிகளை முறைப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்