Soft Aappam: சாஃப்ட் ஆப்பம் எப்படி செய்வது? ஈஸியான டிரிக்ஸ் இதோ!-how to make soft appam in easy tricks - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soft Aappam: சாஃப்ட் ஆப்பம் எப்படி செய்வது? ஈஸியான டிரிக்ஸ் இதோ!

Soft Aappam: சாஃப்ட் ஆப்பம் எப்படி செய்வது? ஈஸியான டிரிக்ஸ் இதோ!

Suguna Devi P HT Tamil
Sep 27, 2024 11:49 AM IST

Soft Aappam: ஒவ்வொரு நாளும் சுவையான சமையல் செய்து தருவது என்பது அலுவலக வேலையை விட சிரமமான செயல் ஆகும். ஏனெனில் இருக்கும் குறைந்த நேரத்தில் சுவையான உணவுகள் செய்வது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

Soft Aappam: சாஃப்ட் ஆப்பம் எப்படி செய்வது? ஈஸியான டிரிக்ஸ் இதோ!
Soft Aappam: சாஃப்ட் ஆப்பம் எப்படி செய்வது? ஈஸியான டிரிக்ஸ் இதோ!

தேவையான பொருட்கள்

ஒரு கப் இட்லி அரிசி

இரண்டு கப் பச்சரிசி

இரண்டு தேங்காய்

1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு

1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்

1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள்

தேவையாண அளவு சர்க்கரை

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் சிறிதளவு வெந்தயம் ஆகியவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு ஊறிய பின் ஒரு மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும். தேங்காய் பால் செய்வதற்கு ஒரு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த அரைத்த தேங்காயை பிழிந்து தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். 

அரைத்த மாவில் சிறிதளவு சர்க்கரை, சிறிதளவு உப்பு, தேங்காய் பாளை சிறிது சிறிதாக கலந்து விடவும். இந்த மாவு தோசை மாவு பதத்தை விட சிறிதளவு கெட்டியான பதத்தில் இருக்குமாறு கலக்கவும். இந்த மாவை சுமார் 6 முதல் 8 மணி நேரங்கள் புளிக்க வைக்க வேண்டும்.  ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை தடவி அதை சுட வைக்கவும். கடாய் சிறிது சூடானதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி கடாயை ஒரு இடுக்கியின் மூலமோ அல்லது ஒரு துணியின் மூலமோ பிடித்து பக்குவமாக சுற்றி மாவை பரப்பி விடவும். பிறகு கடாயில் ஒரு மூடியை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பால் ஆப்பத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது சுவையான, சாஃப்ட் ஆனா ஆப்பம் ரெடி. இதில் சிறிதளவு தேங்காய்பால், துருவிய தேங்காய் சேர்த்து சாப்பிட மிகச்சுவையாக இருக்கும்.   இதை உங்களது வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.