Mushroom Biriyani : தேங்காய் சேர்த்து வித்யாசமான ருசியில் மஸ்ரூம் பிரியாணி! ஈசியா செய்ய இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Biriyani : தேங்காய் சேர்த்து வித்யாசமான ருசியில் மஸ்ரூம் பிரியாணி! ஈசியா செய்ய இதோ ரெசிபி!

Mushroom Biriyani : தேங்காய் சேர்த்து வித்யாசமான ருசியில் மஸ்ரூம் பிரியாணி! ஈசியா செய்ய இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Sep 23, 2024 02:50 PM IST

Mushroom Biriyani : தேங்காய் சேர்த்து வித்யாசமான ருசியில் மஸ்ரூம் பிரியாணி, ஈசியா செய்ய இதோ ரெசிபி. செய்து ருசித்து மகிழுங்கள்.

Mushroom Biriyani : தேங்காய் சேர்த்து வித்யாசமான ருசியில் மஸ்ரூம் பிரியாணி! ஈசியா செய்ய இதோ ரெசிபி!
Mushroom Biriyani : தேங்காய் சேர்த்து வித்யாசமான ருசியில் மஸ்ரூம் பிரியாணி! ஈசியா செய்ய இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு கப்

(சீரக சம்பா அரிசி எடுத்தால் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். பாஸ்மதி அரிசி எடுத்தால் ஒரு கப் அரிசிக்கு ஒன்னேகால் கப் தண்ணீர் சேர்க்கவேண்டும். அரிசியை நன்றாக அலசி அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் அளவு நீங்கள் வழக்கமாக செய்யும்போது எடுத்துக்கொள்ளும் அளவாகவும் இருக்கலாம். எப்போதும் மஸ்ரூமில் இருந்து தண்ணீர் வரும். எனவே தண்ணீரில் கவனம் தேவை. அதேபோல் மஸ்ரூம் பிரியாணிக்கு சீரக சம்பா அரிசி மிகவும் சிறந்தது)

மஸ்ரூம் – கால் கிலோ (சுத்தம் செய்தது, முழுதாக சேர்த்துக்கொள்ளவேண்டும்)

மசாலா அரைக்க

கஷ்மீரி வர மிளகாய் – 4

வர மிளகாய் – 1

(கஷ்மீரி வரமிளகாய் மற்றும் வர மிளகாய் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 10 பல்

புதினா – 6 இலைகள்

மல்லித்தழை – சிறிது

தேங்காய் துருவல் – கால் கப்

மசாலா அரைக்க ஊறவைத்த மிளகாய்களை மிக்ஸி ஜாரில் முதலில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், புதினா மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

எண்ணெய் – 150 மில்லி லிட்டர்

முழு கரம் மசாலா

பிரியாணி இலை – 1

பட்டை – 1

கிராம்பு – 4

ஸ்டார் சோம்பு – 1

ஏலக்காய் – 1

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (முழுதாக போடவேண்டும்)

புதினா மற்றும் மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.

அடுத்து தக்காளி, முழு பச்சை மிளகாய், புதினா மற்றும் மல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, தயிர் சேர்த்து வதக்கவேண்டும். அனைத்தும் வதங்கி எண்ணெய் பிரிந்து வரவேண்டும்.

அப்போது சுத்தம் செய்த மஸ்ரூமையும் சேர்த்து வதக்கவேண்டும். மஸ்ரூம் மசாலாக்களுடன் சேர்ந்த பின்னர், அலசி ஊறவைத்த அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவேண்டும்.

அரிசி நன்றாக வெந்தவுடன், பிரியாணியை கிளறிவிட்டு, சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையில் மஸ்ரூம் பிரியாணி தயார். நெய் தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் தேவையில்லை. கொஞ்சம் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

பிரியாணி பாத்திரத்தை மூடி வைத்து கொதிக்கும் தண்ணீரை அதன்மேல் வைத்து சிறிது நேரம் தம்போட்டு இறக்கினால், சூப்பர் சுவையில் நன்றாக இருக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.