Vegetable Cutlet: நாவில் சுவை அரும்புகளை மலரச்செய்யும் வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி?-how to prepare vegetable cutlet - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vegetable Cutlet: நாவில் சுவை அரும்புகளை மலரச்செய்யும் வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி?

Vegetable Cutlet: நாவில் சுவை அரும்புகளை மலரச்செய்யும் வெஜிடபிள் கட்லட்டை செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Mar 08, 2024 05:49 PM IST

மாலை நேரத்தில் நாம் ருசிக்க வெஜிடபிள் கட்லட்டை எப்படி தயார் செய்வது என்பது குறித்துப் பார்ப்போம்.

வெஜிடபிள் கட்லட்
வெஜிடபிள் கட்லட்

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,

பல்லாரி வெங்காயம் - ஒன்று,

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் - இரண்டு,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்,

கேரட் - ஒன்று,

பீன்ஸ் - ஏழு,

பச்சை பட்டாணி - அரை கப்,

நீர் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு,

மசித்த உருளைக்கிழங்கு - மூன்று,

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

மைதா - அரை கப்

பிரட் கிரப்ஸ் - ஒரு கப்,

செய்முறை: ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். ஒரு நறுக்கிய பல்லாரி வெங்காயத்தைப்போடவும். இதனை ஒரு நிமிடம் நன்கு வதக்கிக்கொள்ளவும். பின் அதன்மேல், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு வதக்கிக்கொள்ளவும். அதில் ஒரு முழு கேரட்டை நன்கு நறுக்கி, அதுனுள் சேர்த்துக் கொள்ளவும். ஏழு பீன்ஸை அதில் நறுக்கிப் போடவும். பின் அதன் மேல் அரை கப் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இதை நன்கு கிளறிக்கொண்டு மூன்று நிமிடங்கள் வரை வேக வைக்கவும். அதனுடன், காய் வேகும் அளவிலான நீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறுதியாக அதில் தேவையான அளவு உப்பினைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் அதில் மசித்து வைக்கப்பட்ட 3 உருளைக் கிழங்கினை சேர்த்துக் கொள்ளவும். அதனைத்தொடர்ந்து அதனை நன்கு கிளறிக்கொள்ளவும். பின், ஒரு டம்ளரின் பின் பகுதியை வைத்து, பாத்திரத்தில் உள்ள பட்டாணியை நசுக்கி விடவும். இந்த கலவையில் நீர் அதிகமாக இருப்பதுபோல் உணர்ந்தீர்கள் என்றால் ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதன்மேல் கூடவே, கொத்தமல்லித்தழை, கால் டீஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டு நன்கு கிளறலாம்.

அதன்பின் அரை கப் மைதா மாவினை எடுத்துக்கொண்டு, அதில் நீர் சேர்த்துக் கொள்ளவும். அதேபோல், 1 கப் பிரட் கிரப்ஸ்(Bread Crumbs) எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது, மேலே தயார் செய்யப்பட்ட பட்டாணி, உருளைக்கிழங்கு கலந்த கலவையினை உருண்டையாகப் பிடித்து அதனை மைதா மாவு கரைசலில் தோய்த்துவிட்டு, பின் பிரட் கிரம்ப்ஸ் மீது உருட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது கட்லட் பொரிப்பதற்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுவிட்டது. பின், அதனை நல்லெண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும். தற்போது மாலை நேரத்தில் ருசிக்க சுவையான வெஜிடபிள் கட்லட் தயார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.