Chennai Special Muttamittai: சென்னை ஸ்பெஷல் முட்டை மிட்டாய் வீட்டிலேயே செய்யலாம்! சிம்பிள் ரெஸிபி இதோ!
Chennai Special Muttamittai: சென்னையில் வாழும் பலருக்கும், அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருப்பவர்களுக்கும் முட்டை மிட்டாய் குறித்து தெரிந்து இருக்கும். இது ஒரு வகையான இனிப்பு உணவு ஆகும்.
திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு என பல ஊர்களை அடையாள படுத்துவதற்கு ஒரு உணவையே கூறுகிறார்கள். ஏனென்றால் உணவு மக்களின் வாழ்வியலில் அவ்வளவு ஆழமாக கலந்து விட்டது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு உணவு தான் முட்டை மிட்டாய், சென்னையில் வாழும் பலருக்கும், அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருப்பவர்களுக்கும் முட்டை மிட்டாய் குறித்து தெரிந்து இருக்கும். இது ஒரு வகையான இனிப்பு உணவு ஆகும்.
முதன் முதலாக இது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் திருவல்லிக்கேணி, ராயபேட்டை பகுதிகளில் இதற்கென தனிக்கடைகள் அமைக்கபட்டுள்ளன. இது முதலில் தமிழ்நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. மேலும் இதன் பெருமை மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. இந்த சுவையான உணவை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணுகின்றனர். இனி இந்த முட்டை மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம். அதற்கான ஈஸி ரெஸிபி இதோ.
தேவையான பொருட்கள்
20 முதல் 25 பாதாம் பருப்பு
கால் கப் பால்
5 முட்டை
ஒரு கப் சர்க்கரை
200 கிராம் நெய்
இனிப்பு இல்லாத பால் கோவா
சிறிதளவு குங்குமப்பூ
கோவா செய்யும் முறை
வீட்டிலேயே இனிப்பு சேர்க்காத கோவா செய்யலாம். அதற்கு முதலில் க்ரீம் பாலை எடுத்து காய வைக்க வேண்டும். அதில் பால் பவுடரை கலந்து கொள்ள வேண்டும். இடை விடாமல் கிளறி விட வேண்டும். இப்போது அது கட்டியாக மாறும். இனிப்பு சேர்க்காத கோவா தயார்.
செய்முறை
முதலில் பாதாம் பருப்புகளை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த பாதாம் பருப்பை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் உரித்த பாதாம், பால் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து உற்ற வேண்டும். அதன் உடன், ஒரு கப் சர்க்கரை, நெய் சேர்த்து கிண்ட வேண்டும். பின்னர் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அரைத்து வைத்து இருந்த பாதாம் பேஸ்டை சேரது கட்டி சேராமல் கிண்ட வேண்டும். பின்னர் ஒரு கடாயில் இவை அனைத்தையும் சேர்க்க வேண்டும். அதனை மிதமான சூட்டில் கிளறிக் கொண்டே இருக்கவும். இப்போது சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். இதனை கிளறிக் கொண்டே இருக்கவும். இப்போது ஓரளவு கட்டியாக மாறியது. சூடு ஆற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பேக்கிங் ட்ரேயில் சிறிதளவு நெய் தடவி வைக்க வேண்டும். மேலும் அதில் இந்த கலவையை ஊற்றி, 170 டிகிரி வெப்பத்தில் பேக்கிங் செய்து எடுக்க வேண்டும்.
சாஃப்ட் ஆன, சுவையான முட்டை மிட்டாய் தயார். இப்போது இதனை அனைவரும் சாப்பிட்டு மகிழலாம். மேலும் இது போன்ற பல ரெசிபிக்களை செய்து குடும்பத்தில் இருப்பவர்களை மகிழ்ச்சி அடைய செய்யலாம். வித்தியாசமான இனிப்பு உணவுகளை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
டாபிக்ஸ்