குழந்தைகள் இனிப்பு அதிகம் சாப்பிடுகிறார்களா? இந்த வழிமுறைகளால் கட்டுப்படுத்தலாம்!
குழந்தைகள் சாக்லேட், மிட்டாய் போன்ற இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இதுபோன்ற இனிப்புகளை சாப்பிடுவது குழந்தைகளின் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குழந்தைகள் சாக்லேட், மிட்டாய் போன்ற இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இதுபோன்ற இனிப்புகளை சாப்பிடுவது குழந்தைகளின் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும், இந்த இனிப்பு பிற்காலத்தில் பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம், மனநலப் பிரச்சனைகள், எலும்பு மற்றும் தசைப் பிரச்சனைகள் போன்றவை இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் . குழந்தைகள் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று இதற்கு அர்த்தம் இல்லை. மேலும் குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக, சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.
இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடும் குழந்தையின் பெற்றோராக நீங்கள் இருந்தால், சில உணவுமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்தப் பழக்கத்தை எளிமையாக குறைக்கலாம். அவை என்னவென்று தெரிந்து கொள்ள இதனை தொடர்ந்து படியுங்கள்.
ஆரோக்கிய உணவுகள்
இனிப்புகளை உட்கொள்வதைக் குறைக்கும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பெற்றோர்கள் பின்பற்றுவது அவசியம். குறிப்பாக குழந்தையின் முன் எப்போதும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவைகலை வைத்திருக்க வேண்டும், இந்த உணவுகளை உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். சோடா, செயற்கை பழச்சாறு, விளையாட்டு பானங்கள், இனிப்பு தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதில் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ள வேண்டும். பேக் செய்யப்பட்ட உணவுகளில் மேப்பிள் சிரப் அல்லது தேன் போன்ற இயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள்.
இயற்கையான உணவுகள்
இனிப்புகளுக்கு பதிலாக புதிய பழங்கள் மற்றும் உலர் பழங்களை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்பு வகைகளாக கொடுக்கலாம். ∙ ஆரோக்கியமான காலை உணவை உண்பதில் கவனம் செலுத்துங்கள். குறைந்த இனிப்பு தானியங்கள், ஓட்ஸ் மற்றும் முட்டைகள் ஆகியவை இனிப்புகளுக்கு பதிலாக மாற்றி கொடுக்கலாம். உணவை திடீரென மாற்றக் கூடாது. இனிப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். குழந்தைகளை சமையலில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சமையல் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த உணவை செய்யும் போதும் உங்கள் குழந்தையைச் சேர்க்கவும்.
இது தவிர வேறு சில விஷயங்களையும் குறிப்பிடலாம். ∙ இடையில் மட்டும் இனிப்புகள் செய்ய ‘ட்ரீட் டே’ என அனுமதிக்கலாம். ∙இனிப்பை பரிசாக அல்லது தண்டனையாக கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். ∙ சர்க்கரையின் தீமைகள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ∙ சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் மற்றும் தேனைப் பயன்படுத்தப் பழகலாம். ∙ குழந்தைகளுக்கு செயற்கை பழச்சாறுகளுக்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்காத பால் கொடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
டாபிக்ஸ்