உடல் எடை அதிகரிக்க விரும்பாமலும், எடை இழப்பு முயற்சியிலும் ஈடுபடுபவர்களாக இருப்பீர்களானால் குளிர்காலத்தில் நீங்கள் எந்த பழங்களை அதிகம் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 23, 2024
Hindustan Times Tamil
நவம்பர், டிசம்பர் மாதத்தில் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கிவிடும். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள் தவறாமல் சாப்பிட்டால் அவற்றால் கிடைக்கும் பலன்களை முழுவதுமாக பெறலாம்
எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் அல்லது உடல் எடை அதிகரிக்க கூடாது என விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய பழங்களை பற்றி பார்க்கலாம்
இந்த பருவகாலத்தில் கிடைக்ககூடிய ஸ்டார் ஃப்ரூட் பார்ப்பதற்கு ஸ்டார் போன்ற தோற்றத்தில் இருக்கும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உடல் எடையை நிர்விகப்பதற்கான சிறந்த பழமாக உள்ளது
பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரி எடை குறைப்புக்கான சிறந்த பழங்களாக உள்ளன. இவை குறைவான கலோரிகளுடன் இருப்பதோடு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடையிழப்பு உதவுகிறது
பருவகால பழமாக இருந்து வரும் சீதாப்பழம் குறைவான கலோரிகளுடன், அதிக நார்ச்சத்துகளை கொண்டுள்ளது. எடை குறைப்பு டயட்டுக்கான சிறந்த பழமாக திகழ்கிறது
நார்ச்சத்து நிறைந்திருக்கும் பேரிக்காயில் இடம்பிடித்திருக்கும் பெக்டின் ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. பசியை கட்டுப்படுத்தி எடை இழப்புக்ுக உதவுகிறது
குறைவான கலோரி, அதிகப்படியான நீர்ச்சத்து கொண்டிருக்கும் கிரேப் ஃப்ரூட் நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதோடு, செரிமானத்துக்கு ஆதரவு அளிக்கிறது. உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துகிறது
அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்திருக்கும் ஆரஞ்சு எடை குறைப்புக்கான சிறந்த தேர்வாக உள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, நீர்சத்து அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துகிறது
வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து மிகுந்த பழமாக இருக்கும் கிவி, ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. குடல் இயக்கத்தை தூண்டுவதன் மூலம் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.