ஒரு காதல் உறவில் உங்கள் பார்ட்னர் பாதுகாப்பின்றி உணர்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
காதலில் பார்ட்னர் பாதுகாப்பின்றி உணர்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

உறவில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுவது எதனால் என்று பாருங்கள். இரண்டு நபர்களின் உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சி இரண்டையும், எந்த உறவிலும் பாதுகாப்பற்ற உணர்வு இருந்தால், அது போய்விடும். பாதுகாப்பின்மை குறித்த அறிகுறிகளை அறிந்துகொள்வது ஒரு காதல் உறவில் இருக்கும் இரண்டு பார்ட்னர்களுக்குமே ஆரோக்கியமான உறவைப் பராமரிக்க நல்லது. எனவே உங்கள் பார்ட்னரிடம் இந்த அறிகுறிகள் காணப்பட்டால் நீங்கள் அந்த உறவு நிலை குறித்து கவனமுடன் இருக்கவேண்டும்.
விமர்சனத்தை கையாள முடியாது
விமர்சகம் அல்லது கருத்துக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே பாதுகாப்பற்ற நபர்களிடம் அடிக்கடி தோன்றும். அதை அவர்கள் தனிப்பட்ட தாக்குதலாகக் கருதுவார்கள். இது அவர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். அவர்களால் சிறந்த உரையாடலை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலாமல் செய்துவிடும்.
தனிப்பட்ட இடம் இருக்காது
உங்கள் பார்ட்னர் உங்களுக்குத் தேவையான தனிப்பட்ட நேரத்தை கொடுக்காமல், நாள் முழுவதும் உங்களைச் சுற்றியே வந்தால், அவர்களுக்கு அவர்கள் உறவில் பாதுகாப்பின்மை உள்ளது என்று பொருள். அவர்களை கைவிட்டுவிடுவீர்களோ என்ற அச்சத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.