உங்கள் உடலில் வைட்டமின் சி சத்துக்கள் குறைந்துள்ளதை எப்படி அறிய முடியும்? இதோ வழிகள்!
உங்கள் உடலில் வைட்டமின் சி சத்துக்கள் இல்லாததை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

உங்கள் உடலில் வைட்டமின் சி சத்துக்கள் குறைந்துள்ளதை எப்படி அறிய முடியும்? இதோ வழிகள்!
உங்கள் உடலில் வைட்டமின் சி சத்துக்கள் குறைந்துள்ளது என்பதன் அறிகுறிகளாக என்ன இருக்கும்? வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால் உங்கள் உடல் வலுவிழக்கும். நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும். காயங்கள் ஆறுவதில் தாமதம் ஏற்படும். ரத்த நாளங்களின் பலத்தைக் குறைக்கும். உடலின் ஆற்றல் அளவைக் குறைக்கும்.
எலும்பு வலுவிழப்பது முதல் அறிகுறி
வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால், அது எலும்பு ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதை நீங்கள் குறைவாக எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு எலும்புப்புரை நோய் மற்றும் எலும்பு முறிவை ஏற்படுத்தும்.
தசை வலி மற்றும் பலவீனம்
உங்கள் சருமத்தில் கொலாஜென்கள் சரியான அளவில் சுரக்கவில்லையென்றால், அது உங்கள் தசைகளை பலவீனமாக்கி, உங்களுக்கு தசை வலிகளைத் தரும். கொலாஜென்கள்தான், உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் புரதச்சத்து ஆகும்.