சரும ஆரோக்கியத்தில் தேன் தரும் நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Feb 17, 2024
Hindustan Times
Tamil
தேனில் சருமத்துக்கு ஊட்டமளித்தல், பாதிப்புகளை குணப்படுத்துதல் பண்புகள் நிறைந்துள்ளன. சரும ஆரோக்கியத்தில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது
சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கும்
சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. சருமத்தில் நன்கு ஊடுருவி அதன் அடுக்குகளில் ஈரப்பத்ததை தருகிறது
இயற்கை உறிப்பானாக உள்ளது
பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் தேனில் அதிகமாக உள்ளது. இவை சருமத்தை சுத்தப்படுத்தி அழுக்குகளை உறித்து துளைகளை அடைக்கிறது
வடுக்களை இலகுவாக்குகிறது
தேனில் இடம்பிடித்திருக்கும் ஹைட்ரோஜன் பெராக்சைடு சருமத்தை இலகுவாக்குகிறது. சருமத்தில் ஏற்படும் முகப்பரு, வடுக்கள் மற்றும் நிறமிகளை குறைக்கும்
சருமத்தில் முறிவுகள் ஏற்படுவதை தடுக்கிறத
பாக்டீரியா, அழற்சிக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கும் தேன் பருக்கள் போக்கவும் அதனால் ஏற்படும் முறிவுகளை தடுக்கவும் செய்கிறது
சருமத்தை பொலிவாக்க உதவுகிறது
தேனில் இருக்கும் உறித்தல் தன்மை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி இயற்கையான பொலிவை தருகிறது
நீண்ட காலம் வாழ வேண்டுமா? அதற்கு காபி உதவும் என்கிறது ஒரு ஆய்வு
க்ளிக் செய்யவும்