Home Decors Idea : உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? உடனடியாக இந்த 10 மாற்றங்களை செய்துவிடுங்கள்!-home decors idea want to pour wealth into your home make these 10 changes right away - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? உடனடியாக இந்த 10 மாற்றங்களை செய்துவிடுங்கள்!

Home Decors Idea : உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? உடனடியாக இந்த 10 மாற்றங்களை செய்துவிடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 07, 2024 04:17 PM IST

Home Decors Idea : உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? உடனடியாக இந்த 10 மாற்றங்களை செய்துவிடுங்கள். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள.

Home Decors Idea : உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? உடனடியாக இந்த 10 மாற்றங்களை செய்துவிடுங்கள்!
Home Decors Idea : உங்கள் வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? உடனடியாக இந்த 10 மாற்றங்களை செய்துவிடுங்கள்!

குப்பையான மற்றும் ஒழுங்கில்லாத

குப்பையாகவும், பழைய பொருட்கள் குவிந்தும், அடுக்கி வைக்கப்படாமலும் இருக்கும் வீட்டில் எதிர்மறை எண்ணங்களே அதிகம் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சி என்பது துளி கூட இருக்காது. இதனால் பொருளாதாரம் செழிப்பது கடினமாகும். எனவே வீட்டை சுத்தமாகவும், தேவையற்ற பொருட்களை முறையாக அடுக்கியும் வைக்கவேண்டும். அதில் சேரும் தூசிகளை அவ்வப்போது சுத்தம் செய்துவிடவேண்டும்.

வீட்டின் நுழைவாயில்

உங்கள் வீட்டில் செல்வத்தை கவர்ந்து இழுக்கவேண்டுமெனில், உங்கள் வீட்டின் நுழைவுவாயில், நேர்மறை எண்ணங்களை கவர்ந்திழுக்கும் வகையிலும், நல்ல ஆற்றலை பெருக்கம் வகையிலும் இருக்கவேண்டும். தரையில் நல்ல விரிப்பு ஒன்றை போடுங்கள். நுழைவாயிலில் விநாயகர் சிலைகள், சில தொட்டிச் செடிகள் என கொஞ்சம் அலங்காரமாக இருந்தால் உங்கள் வீடு அழகாகவும் இருக்கும். செல்வமும் செழிக்கும்.

செல்வ அடையாளங்கள்

செல்வ அடையாளங்களும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டில் பணம் மற்றும் ஆரோக்கியத்தையும் கொண்டுவரும். அதற்கு நீங்கள் மணி ப்ளான்ட், ஒரு பாத்திரத்தில் காயின்கள், செல்வ தொட்டி அல்லது செல்வத்தை தரும் படங்கள் என உங்கள் வீட்டில் ஆங்காங்கே வைக்கவேண்டும். அதுவும் செல்வத்தை கவர்ந்திழுக்கும். உங்கள் வீட்டில் செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

நிறம்

சிலர் சில நிறங்களை விரும்புவார்கள். செல்வத்தையும், அதிகப்படியான செல்வத்தையும் கவர்ந்து இழுக்க சில நிறங்கள் உதவும். உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டி பொன் நிறத்தில் இருக்கவேண்டும். பச்சை, பர்பிள் அல்லது மஞ்சள் நிறத்திலும் பண அறை இருக்கலாம். இந்த வண்ணமும் செல்வத்தை கவர்ந்து இழுக்கும்.

லட்சுமி தேவி மற்றும் குபேர சிலைகள்

உங்கள் வீட்டில் கட்டாயம் லட்சுமியின் சிலைகள் மற்றும் குபேரர் சிலைகள் வைக்கவேண்டும். இவை பணம், செல்வச்செழிப்பு மற்றும் ஆரோக்கியத்தை குறிக்கிறது. எனவே வீட்டில் நீங்கள் செல்வத்தை கவர்ந்திழுக்க விரும்பினால், இந்த சிலைகளை உங்கள் வீட்டில் உள்ள பூஜையறையில் வைக்கவேண்டும்.

இயற்கை ஒளி

வீட்டுக்கு இயற்கை ஒளிதான் நல்லது. சூரியனின் கதிர்கள் வீட்டை சுத்தம் செய்யும், வீட்டுக்கு ஆற்றலைத் தரும். எனவே உங்கள் வீட்டில் சூரிய ஒளி நிறையும் வகையில் ஜன்னல்களை அமைக்கவேண்டும். எனவே இயற்கை ஒளியை உங்கள் வீட்டில் பரவவிடுங்கள். நல்ல ஆற்றல் நிறையும்.

பட்டை

பட்டை நாம் உணவுகளுக்கு பயன்படுத்தும் ஒரு மசாலாப் பொருள் ஆகும். இதை நீங்கள் வீட்டில் செல்வம் செழிக்கவும் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் இதை நீங்கள் செய்யவேண்டும். கொஞ்சம் பட்டையை எடுத்து பொடி செய்து, அதை வீட்டின் நுழைவாயில் மற்றும் வீட்டின் மூளைகளில் தூவவேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பண அறையில் பட்டையை வைக்கவேண்டும்.

செல்வத்தை கவர்ந்திழுக்கும் செடிகள்

செல்வத்தை கவர்ந்திழுக்கும் செடிகளான ஜேட், அதிர்ஷ்ட மூங்கில் ஆகியவற்றை வீட்டில் வளர்த்து உங்கள் வீட்டுக்கு நேர்மறை எண்ணங்களை வரவழைக்கலாம். இது உங்கள் வீட்டுக்கு ஆரோக்கியம் மற்றும் அதிக செல்வத்தைக் கொண்டுவரும். எனவே இந்தச் செடிகளை உங்கள் வீட்டின் பால்கனி அல்லது அறைகளில் வைக்கலாம். அவற்றை புதியது போல் நீங்கள் வைத்திருக்கவேண்டும். அந்தச்செடிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவேணடும். கவனம் அவை வாடத்துவங்கினால் உங்கள் வீட்டில் செல்வம் குறையும்.

கண்ணாடிகள்

உங்கள் வீட்டில் செல்வச்செழிப்பைக் கொண்டுவர கண்ணாடிகள் முக்கிய கருவிகள் ஆகும். உங்கள் வீட்டில் கண்ணாடி வடக்கு திசையில் இருக்கவேண்டும். இது உங்கள் வீட்டுக்கு செல்வம் மற்றும் அதிகப்படியான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

பணத்தை ஈர்க்கும் வாசங்கள்

உங்கள் வீட்டில் அல்லது பணம் வைக்கும் பையில், இடத்தில் நீங்கள் ஒரு சிறிய பேப்பரில், பணத்தை கவர்ந்து இழுக்கம் வாசகங்களை எழுதி, அதில் வைக்கவேண்டும். அதில் பணத்தை ஈர்க்கும் வாசகங்கள் அல்லது நேர்மறை எண்ணங்களைத் தரும் வாசகங்களை எழுதி வைக்கவேண்டும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.