Train Your Teen : ‘இதுகத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தில் பரவசப்படுத்தும் பாலியல் எண்ணங்கள் உண்மையில் என்ன?
- Train Your Teen : ‘இதுகத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தில் பரவசப்படுத்தும் பாலியல் எண்ணங்கள் உண்மையில் என்ன?
- Train Your Teen : ‘இதுகத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தில் பரவசப்படுத்தும் பாலியல் எண்ணங்கள் உண்மையில் என்ன?
(1 / 8)
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கற்க ஊக்கப்படுத்துங்கள்உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு அவர்களின் உடலை எப்படி கவனித்துக்கொள்வது என கற்றுக்கொடுங்கள். தங்களை பராமரித்துக்கொள்வது எவ்வளவு நல்லது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். அவர்களுக்கு சில விதிகளை விதிப்பதைவிட அவர்களிடம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் உறக்கம் ஆகியவை பேசுவது நல்லது.
(2 / 8)
உடற்பயிற்சி - உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். கார்டியோ வாஸ்குலர் உடற்பயிற்சிகள் செய்யவேண்டியது அவசியம். இதயத்துக்கு கொடுக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் விளையாட்டு குழுவில் சேர விரும்பவில்லையென்றால் அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்கள் உண்மையிலேயே மகிழும் விஷயத்தை கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் ஒரு விளையாட்டில் சேரவில்லையென்றால், அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.இல்லாவிட்டால், அவர்கள் நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது சைக்கிள் ஓட்டலாம்.உடற்பயிற்சி கூடம் செல்லலாம்.தற்காப்பு கலைகள் கற்கலாம்.யோகா பழகலாம்.ஆரோக்கியமான பழக்கங்களுள் ஒன்றாக உடற்பயிற்சியை அவர்கள் கட்டாயம் செய்யவேண்டும்.
(3 / 8)
உறக்கம் - தினமும் இரவில் அவர்கள் 8 முதல் 10 மணி நேரங்கள் வரை கட்டாயம் உறங்கவேண்டும். அவர்கள் அதிகாலையில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய நிலை இருந்தால், அவர்களால் சரியான அளவு உறக்கத்தை பெற முடியாது. அவர்கள் உடலின் கடிகாரம் அவர்களை அதிக நேரம் உறங்கவைக்கும் அல்லது அவர்களை நீண்ட நேரம் விழித்திருக்கச் செய்யும்.
(4 / 8)
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் நன்றாக உறங்கவேண்டும் என்றால், நீங்கள் செய்யவேண்டியது என்ன? - பகலில் தூங்குவதை தவிர்க்கவேண்டும் – பள்ளி முடிந்து வந்து உறங்கினால் இரவு உறக்கம் கெடும். எனவே அதை தடுக்கவேண்டும்.
(5 / 8)
தொடர்ச்சியான உறக்க பழக்கம் இருக்கவேண்டும் – வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களில் தாமதமாக உறங்கி, தாமதமாக எழுவது அவர்கள் உடலின் கடிகாரத்தை பாதிக்கும். எனவே பள்ளி இல்லாத நாட்களிலும், பள்ளி நாட்களிலும் அவர்கள் ஒரே நேரத்தில் உறங்கி எழவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். அவர்களின் உறக்கப்பழக்கம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கவேண்டும்.
(6 / 8)
அவர்களின் இரவு வழக்கம் குறித்து பேசுங்கள் – அவர்கள் உறங்கச் செல்லும் அவர்களுக்கான நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
(7 / 8)
எலக்ட்ரானிக் பொருட்களை முன்னரே அணைத்துவிடுங்கள் – உங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள், லேப்டாப்கள் மற்றும் டிவிக்களை உறங்கச் செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அணைத்துவிடுங்கள். அவர்கள் உறங்கும் இடத்தில் ஃபோன்கள் இருக்கக்கூடாது.
(8 / 8)
மருத்துவரிடம் செல்வது - டீன் ஏஜ் வயதினர் 21 வயது வரை அவர்களின் மருத்துவரை அவ்வப்போது சென்று சந்திக்கவேண்டும்.அவர்களுக்கு இந்தப் பருவத்தில்முகப்பருக்கள்ஆஸ்துமாசுவாசக் கோளாறுகள்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், அவர்களுக்கு அது அவசியம் ஆகிறது. அவர்கள் உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளின் உடல் அளவை பரிசோதித்து அவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் மற்றும் செய்யவேண்டிய பயிற்சிகள் குறித்து விளக்குவார்கள்.பாலியல் ஆரோக்கியம் குறித்தும் அவர்கள் விளக்குவார்கள். நீங்கள் டீன் ஏஜ் பருவத்திலே செக்ஸில் ஈடுபடத்துவங்கிவிட்டீர்கள் என்றால், பாலியல் நோய்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.அவர்களை மருத்துவருடன் தனியாக உரையாட அறிவுறுத்தவேண்டும். அவர்களுக்கு பாலியல், பாலினம், பாலியல் நோய்கள், மது, போதைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் தேவையிருக்கும். இதை அவர்கள் தங்கள் பெற்றோர் முன் பேச தயங்குவார்கள். எனவே அவர்களுக்கு மருத்துவருடனான தனிமை அவசியம்.
மற்ற கேலரிக்கள்