Home Decors Idea : வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துளசிச் செடியை எந்த இடத்தில் நட்டு வைத்தால் செல்வம் செழிக்கும்?
Home Decors Idea : வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துளசிச் செடியை எந்த இடத்தில் நட்டு வைத்தால் செல்வம் செழிக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துளசியை வைக்க ஏற்ற இடம் எதுவென்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். துளசிச்செடியை வைக்க ஏற்ற இடத்த தெரிந்துகொண்டு அந்த இடத்தில் அதை நடவு செய்து வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள். ஒரு வீட்டில் கட்டாயம் 14 துளசிச் செடிகள் இருக்கவேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. அப்போது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு செடியாவது வைத்திருங்கள். அந்தச்செடியையும் நீங்கள் எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டால், உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் துளசி ஒரு மூலிகைச் செடி மட்டுமல்ல, அது ஒரு புனிததான செடியும் ஆகும். இது லட்சுமி தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியை உங்கள் வீட்டில் வைத்தால் அது உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்களைப் பரப்பி, லட்சுமி தேவியை உங்கள் வீட்டு வரவழைத்து உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கச் செய்வதாக இந்து மதம் கூறுகிறது. உங்கள் வீட்டில் துளசி செடியை வைத்திருந்து நல்ல நேர்மறை எண்ணங்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள். உங்கள் வீட்டில் ஆரோக்கியமும் உண்டாகும்.
வாஸ்துப்படி துளசிச் செடியின் முக்கியத்துவம்
வாஸ்து சாஸ்திரத்தில் துளசி ஒரு சக்திவாய்ந்த செடியாகக் கருதப்படுகிறது. இந்தச்செடி வீட்டில் உள்ள ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட உதவுகிறது. இதனால் உங்கள் வீட்டில் அமைதி, தூய்மை நிறையச் செய்கிறது. உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
உங்கள் வீட்டில் துளசிச் செடிகள் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்
உங்கள் வீட்டில் துளசிச் செடிகள் வைப்பதால், எண்ணற்ற மருத்துவ பலன்கள் உண்டு. அதன் மூலம் வீட்டுக்கு நேர்மறை எண்ணங்கள் வரும். மேலும் பல நன்மைகளும் உள்ளது. இதன் மணம் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த இலைகளை சாப்பிடுவதால் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதில்லை.
வாஸ்துப்படி சரியான திசை
உங்கள் வீட்டில் துளசிச்செடியை வைக்க வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான திசை எது என்றால், அது வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசைதான். இந்த திசைகள் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இங்கு துளசியை வளர்ப்பது வீட்டின் அமைதியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.
சிறந்த இடம்
பாரம்பரியமாக துளசிச் செடியை வைக்க ஏற்ற இடமாக முற்றம் இருந்தது. அங்குதான் மழை, வெயில், காற்று என செடி வளர தேவையான அனைத்தும் கிடைக்கும். அது இன்றைய நவீன அப்பார்ட்மென்களில் சாத்தியம் கிடையாது என்பதால், மாடியில் அல்லது பால்கனியில் அல்லது செடிக்கு நேரடியாக தினமும் 2 – 4 மணி நேரம் வரை வெயில் கிடைக்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் செடியை வளர்க்கலாம்.
பராமரிக்கும் முறைகள்
வாஸ்து சாஸ்திரத்தின்படி துளசிச் செடிகளை நட்டு வளர்க்கி சில சாஸ்திரங்கள் பின்பற்றப்படுகிறது. அவை, துளசிச் செடிக்கு அதிகாலையில்தான் தண்ணீர் விடவேண்டும். இதன் இலைக சூரியன் மறைந்தபின் பறிக்கக்கூடாது. துளசிச் செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது, பக்திப்பாடல்கள் பாடிக்கொண்டே ஊற்றவேண்டும்.
நேரடியாக மண்ணில் நடக்கூடாது
மற்றொரு முக்கியமான அறிவுரை துளசிச் செடிகளை நேரடியாக மண்ணில் நடக்கூடாது. இது மிக முக்கியமான விதியாகும். தொட்டிகளில் அல்லது மாடங்களிலோதான் துளசிச் செடியை நடவேண்டும். குறிப்பாக அதை உயரத்தில் வைக்கவேண்டும்.
முட்செடிகள்
துளசிக்கு அருகில் முட்செடிகளை வளரவிடக்கூடாது. இதை கட்டாயம் பின்பற்றவேண்டும். இது புனிதமான செடி என்பதால், இது இயற்கையாகவே நேர்மறை எண்ணங்கள் மற்றும் அமைதியை வீட்டுக்கு அழைக்கும். ஆனால் அருகில் இருக்கும் அந்த முட்செடிகள் அந்த ஆற்றலைக் குலைக்கும். எனவே துளசிக்கு அருகிலோ அல்லது துளசியைச் சுற்றியோ முட்செடிகள் இருக்கக்கூடாது.
சிவன்
துளசி புனிதமான மற்றும் மங்களகரமான செடியாக இருந்தாலும், இதை சிவனுக்கு படைக்கக்கூடாது. ஜலந்தர் என்ற அரக்களை சிவன் அழித்தபோது, அவரது மனைவி துளசி என்பவரை அவரை எப்போதும் வழிபடக்கூடாது என்று சபித்தார். எனவே துளசியை எப்போதும் சிவபெருமானுக்கு படைக்கக்கூடாது. மேலும் துளசி பெருமாளுக்கு படைக்கப்படும் முக்கியமான ஒன்றாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்