Tulasi Plants: ஏகாதசி நாளில் துளிசிக்கு தண்ணீர் ஊற்ற கூடாது..துளசி வளர்ப்பதில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகள்
Tulasi Plants Growing Rules: ஏகாதசி நாளில் துளிசிக்கு தண்ணீர் ஊற்ற கூடாது. அதற்கான பின்னணி காரணமும் துளசி வளர்ப்பதில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
துளசி வழிபாடு சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை மாத தேயுதனி ஏகாதசி நாளில் துளசி திருமணமும் நடைபெறுகிறது. உங்கள் வீட்டிலும் துளசி இருந்தால் அதை வழிபடுவதற்கு முன், நீங்கள் சில விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
வேதங்களில் துளசி அன்னை லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது, எனவே துளசியை தினமும் வணங்க வேண்டும். தினமும் காலையில் துளசிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். மாலையில் துளசி செடியின் கீழ் நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு.
தினமும் செய்ய முடியாவிட்டாலும், ஏகாதசி, பூர்ணிமா நாளில் கண்டிப்பாக மாலையில் கண்டிப்பாக துளசியில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். துளசியில் தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் இரு கைகளாலும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
துளசி செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது மங்களகரமானது. ஏனெனில், சாஸ்திரங்களின்படி, இது நீரின் திசை. துளசி செடியை இந்த திசையில் வைத்தால், அது உலகில் உள்ள அனைத்து நேர்மறையான முடிவுகளையும் தருகிறது. மேலும் வீட்டின் கிழக்கு திசையில், துளசியை நடவு செய்வதும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது
துளசிக்கு இந்த நாள்களில் தண்ணீர் ஊற்ற கூடாது
ஞாயிறு மற்றும் ஏகாதசி நாள்களில் துளசிக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. இந்த நாளில் துளசி மாதா விரதம் இருப்பார் என்றும், தண்ணீர் பிரசாதம் கொடுத்தால் நோன்பு முறியும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர ஏகாதசி, ஞாயிறு, பூர்ணிமா ஆகிய நாட்களில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பு பறித்தும் பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டில் உள்ள துளசி காய்ந்திருந்தால், அதை தூக்கி எறிய வேண்டாம், அதன் மரத்தை பாதுகாப்பாக வைக்கலாம்.
துளசியை அழுக்கு கைகளால் தொடக்கூடாது. மாலையில் அதன் இலைகளை பறிக்கக்கூடாது. துளசி இலைகளை எப்போதும் காலையில் தான் பறிக்க வேண்டும்.
விஷ்ணு மற்றும் கிருஷ்ணர் வழிபாட்டில் துளசி இலைகளை அர்ப்பணிக்கலாம். அவை இல்லாமல், பிரசாதம் ஏற்றுக்கொள்ளப்படாது. துளசி இலைகள் கெட்டுப்போகாது. எனவே பழைய துளசி இலைகளையும் பூஜையில் பயன்படுத்தலாம்.
நேர்மறை விளைவுகள்
துளசி செடி வைக்கப்படும் இடத்தில், துடைப்பம், அழுக்கு, குப்பைத்தொட்டி இருக்கக்கூடாது, அதை மனதில் கொள்ள வேண்டும். இடத்தை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். வீட்டில் நேர்மறையான விளைவை பராமரிக்க துளசி செடியை புதியதாகவே வைத்திருப்பதை உறுதி செய்யவும்.
துளசி செடி வீட்டைச் சுற்றி நேர்மறை ஆற்றலையும் தூய்மையையும் தரவல்லது. இந்த செடி உலர ஆரம்பித்தால், அது வீட்டில் நேர்மறை இல்லை என்பதற்கான அறிகுறியாக கருதப்பட வேண்டும். துளசி செடி பச்சை நிறத்தில் இருந்தால் அந்த குடும்பம் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்