தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Heritage Of Chettinadu Banana Leaf Feast

Chettinadu Banana Leaf Feast: பாரம்பரிய செட்டிநாட்டு வாழையிலை மதிய விருந்து

I Jayachandran HT Tamil
Feb 02, 2023 01:14 PM IST

பாரம்பரிய செட்டிநாட்டு வாழையிலை மதிய விருந்து பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

பாரம்பரிய செட்டிநாட்டு வாழையிலை மதிய விருந்து
பாரம்பரிய செட்டிநாட்டு வாழையிலை மதிய விருந்து

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி வீட்டுக்கு விருந்தாளியாக வந்தாரை கையமர்த்தி, தலை வாழை இலை போட்டு வகையாய் வெஞ்சனம், வயிறு நிறைய சாப்பாடு அன்போடு உபசரித்தல் இது நமது பாரம்பரியம். இதிலும் குறிப்பாக செட்டிநாடு பகுதியில் உபசரிக்கும் விதம் சற்று தடபுடலாக இருக்கும். இது பற்றி பார்க்கலாம்.

இலையில் பரிமாறப்படும் உணவுகளை எப்படி வைக்க வேண்டும் என்பதற்கே ஒரு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

விருந்தின் மாண்பைப் பற்றி இதுவரை பார்த்தோம்.

இனி விருந்தில் பரிமாறப்படும் உணவுகளையும் அதை பரிமாறும் விதத்தையும் பார்க்கலாம்.

செட்டிநாட்டு விருந்து இலையில் இடமிருந்து வலமாக முதலில் உப்பு வைக்க வேண்டும். இரண்டாவதாக வர்கண்டம் எனப்படும் அப்பளம்,

வத்தல் போன்ற பொரித்தவற்றையும், அடுத்து வறுவல்/ சாப்ஸ் வைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து வடை வைக்க வேண்டும். பின்னர் கோலா உருண்டை, அதற்கடுத்தாற்போல் பக்கோடா, அடுத்து வாழைக்காய் வறுவல், உருளைக்கிழங்கு வறுவல்

இதன் பின்னர் வெஞ்சனம் வைப்பர்

அதில் முதலில் கூட்டு பின் மசியல், அதற்கடுத்து துவட்டல், பின்னர் மண்டி, பொரியல், பச்சடி, கோலா / உசிலி

அடுத்ததாக

துணை சாதம் / பிரியாணி வைப்பர்

இதைத் தொடர்ந்து சூப் வழங்கப்படும்.

பின்னர் பருப்பு, நெய் / மிளகுப்பொடி, நெய் தரப்படும்.

அடுத்து சாம்பார்

பின்னர் கெட்டிக்குழம்பு / காரக்குழம்பு

அடுத்ததாக தண்ணிகுழம்பு / இளங்குழம்பு

பின்னர் ரசம் பரிமாறப்படும்

தொடர்ந்து மோர் / தயிர்

அடுத்ததாக பாயசம்

பின் ஊறுகாய் வைக்கப்படும்.

அத்தனை வகைகளையும் சாப்பிடவேண்டுமென்றால் இந்த விருந்துக்கு நீங்கள் ஏற்கெனவே வயிற்றை தயார் படுத்திக் கொண்டு வருவார்கள்.

போதும் போதும் என்று கெஞ்சுமளவுக்கு பரிமாறி தங்கள் அன்பு முழுவதையும் கொட்டித் தீர்வார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்