தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Eye Problems: செல்போனில் இத்தனை சிக்கலா? - குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Eye Problems: செல்போனில் இத்தனை சிக்கலா? - குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 23, 2023 11:15 AM IST

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளால் குழந்தைகளுக்குக் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கே காண்போம்.

குழந்தைகள் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைகள் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகள் வளர வளர அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இது பலவிதமான கண் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பள்ளியில் படிக்கக்கூடிய காலத்திலேயே அதிக குழந்தைகள் கண்ணாடிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

உடலில் முக்கிய புலனாக விளங்கக்கூடிய கண்களில் எந்த விஷயங்களில் நாம் தவறு செய்கிறோம் என கண்டறிந்து அதற்கு சரியான முறையில் சிகிச்சை பெற வேண்டும். பயிற்சி எடுப்பதும் ஒரு வகை சிகிச்சை தான். இதற்கான வழி என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

மருத்துவர்கள் கூறும் ஆலோசனை

வழக்கமான செயல்பாடுகளை விட நாம் அனைத்தையும் அருகில் வைத்துப் பார்ப்பது, தொலைக்காட்சியை மிக அருகில் நெருங்கிச் சென்று பார்ப்பது எனப் பார்வைக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய அனைத்து செயல்களையும் செய்து வருகிறோம்.

இதன் மூலம் கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்தல் என பல்வேறு விதமான பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. தற்போது ஸ்மார்ட் போன்கள் மக்களிடையே ஒரு குடும்ப உறுப்பினராக மாறிவிட்டது.

குறிப்பாகக் குழந்தைகளின் கையில் ஸ்மார்ட் போன்கள் மிகவும் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது. உணவு ஊட்டுவதிலிருந்து, சமாதானப்படுத்தும் வரை ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்துவிட்டன.

கண் பாதிப்பு

பெற்றோர்களே இதனைப் பயன்படுத்த அனுமதிக்கும் காரணத்தினால், குழந்தைகள் அதனை மிகவும் தங்களுக்கு ஏற்ப வசதியாக மாற்றிக் கொள்கின்றனர். அதன் காரணமாக ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் குழந்தைகள். அதனால் அவர்களுக்கு கண்களில் பலவிதமான பாதிப்புகள் உண்டாக்குகிறது.

அதாவது கண்களில் நீர் வறட்சி, தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு, கண் எரிச்சல் என அனைத்து பாதிப்புகளும் உண்டாகின்றது.

எனது இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காகக் குழந்தைகளை அடிக்கடி கண்காணித்து ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் நேரத்தைக் குறைக்க வேண்டும். மேலும் வருடாந்திர பரிசோதனைக்கும் அழைத்துச் சென்று பெண்களின் சோதனை செய்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்