தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்! சோர்வை அடித்து விரட்டும்! இந்த பானம் மட்டும் 27 இரவுகள் வேண்டும்!

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்! சோர்வை அடித்து விரட்டும்! இந்த பானம் மட்டும் 27 இரவுகள் வேண்டும்!

Priyadarshini R HT Tamil
Jul 01, 2024 01:35 PM IST

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும், சோர்வை அடித்து விரட்டும். இந்த ஒரு பானத்தை மட்டும் 27 இரவுகள் தொடர்ந்து பருகிப்பாருங்கள் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஆச்சர்யப்படுவீர்கள்.

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்! சோர்வை அடித்து விரட்டும்! இந்த பானம் மட்டும் 27 இரவுகள் வேண்டும்!
Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்! சோர்வை அடித்து விரட்டும்! இந்த பானம் மட்டும் 27 இரவுகள் வேண்டும்!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

இந்த பானத்தை முதலில் 27 நாட்கள் பருகவேண்டும். பின்னர் வாரத்தில் 3 முறை பருகினால் போதும். உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலில் சோர்வு என்பதை ஏற்படாது.

தேவையான பொருட்கள்

உலர்ந்த கருப்பு திராட்சை – 70

தண்ணீர் – ஒரு லிட்டர்

செய்முறை

தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அதில் உலர்ந்த கருப்பு திராட்சைகளை சேர்க்கவேண்டும். தண்ணீர் மொத்தமும் சுண்டவேண்டும். ஒரு டம்ளராகும்போது அடுப்பை நிறுத்திவிட்டு, இந்த ஸ்மாஷர் வைத்து நன்றாக கடைந்துவிடவேண்டும். பின்னர் அந்த தண்ணீரை பருகிவிட்டு, இரவு உறங்கச் செல்லவேண்டும்.

இது உங்களுக்கு நல்ல உறக்கத்தைக்காடுத்து, காலையில் எழுந்து சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இதை முதலில் 27 நாட்கள் இரவு செய்யவேண்டும். பின்னர் வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொண்டால் போதும். உடல் வலுப்பெறும், ஆரோக்கியமும் மேம்படும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சோர்வு ஏற்படும்.

உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன நடக்கும்?

உங்கள் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம்தான் ஹீமோகுளோபின். ரத்த சிவப்பணுக்கள் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன.

உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்படும். இதனால் புற்றுநோய் மற்றும் அனீமியா ஆகிய நோய்கள் ஏற்படுகிறது.

இந்த ரத்தச்சிவப்பணுக்கள் உடலில் கடத்தும் ஆக்ஸிஜன்கள்தான் உங்கள் உடலின் மற்ற செல்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உங்களுக்கு அனீமியா மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.

நமது உடலில் ஹீமோகுளோபினின் பொதுவான அளவு என்ன?

ஆண்கள் உடலில் பொதுவாக 14 முதல் 17.5 வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.3 முதல் 15.3 வரை இருக்க வேண்டும். 13.5க்கு கீழ் குறைந்தால் ஆண்களுக்கு ஆபத்து. 12க்கு கீழ் குறைந்தால் பெண்களுக்கு ஆபத்து.

எதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது?

உங்கள் உடலால் போதிய அளவு ரத்தச்சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. உங்கள் உடல் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து உங்கள் உடல் ரத்த சிவப்பணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.

சில நேரங்களில் உங்கள் எலும்பு மஜ்ஜைகள், போதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியாமல்போனால் உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

உங்கள் உடல் தேவையான அளவு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அது அழிந்துவிடுகிறது. மீண்டும் உற்பத்தி செய்வதற்கு இணையாக அது உடலில் இருக்க முடியாமல் போவதால் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

விபத்து உள்ளிட்ட காரணங்களில் உடலில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால், ரத்தம் இழக்கும்போது, உங்கள் உடலில் இரும்புச்சத்தும் குறைகிறது. பெண்களுக்கு மாதவிடால் காலங்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைகிறது.

உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதனால் ரத்த அல்சர் ஏற்படுகிறது.

உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியாது. இதனால், உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.

வைட்டமின் பி12, பி9 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் உடலுக்கு கிடைக்காவிட்டாலும் உடலில் ரத்தசிவப்பணுக்கள் குறையும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பலன்பெறுங்கள்.

டாபிக்ஸ்