Heat Wave : தமிழகத்தில் வெப்ப அலை இனி இருமடங்கு உயரும்! சென்னைதான் அதிவெப்ப நகரம் – ஆய்வில் அதிர்ச்சி!
Heat Wave : தமிழகத்தில் வெப்ப அலை இனிவரும் காலங்களில் இருமடங்கு உயரும் என்றும், இந்தியாவிலேயே சென்னைதான் அதிவெப்ப நகரம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Heat Wave : தமிழகத்தில் வெப்ப அலை இனி இருமடங்கு உயரும்! சென்னைதான் அதிவெப்ப நகரம் – ஆய்வில் அதிர்ச்சி!
சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்
Urban Lab of the Centre for Science and Environment செய்த ஆய்வில், 2011ம் ஆண்டிற்குப்பின், இந்திய பெருநகரங்களில், சென்னையில் தான் சராசரி கோடைக்கால வெப்பம் மிக அதிகமாக 37.4°C என்ற அளவில் உள்ளது.
சென்னை, கடற்கரைக்கு அருகில் உள்ளதால், கோடை காலத்தில் ஒப்பீட்டு ஈரப்பத அளவு(Relative Humidity) அதிகம் இருப்பதால், இந்திய பெருநகரங்களிலேயே, சென்னையில் தான் வெப்ப குறியீடு (Heat index) அதிகமாக இருப்பதும், அதனால் சென்னையின் வெப்பக் குறியீடு 6.9°C என்ற அளவில் அதிகமாக இருந்து மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த ஆய்வில், கோடைக்கால வெப்பம் 2001-11, 2014-23 கால கட்டத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் ஒப்பிடப்பட்டது. (2011-23 இடைப்பட்ட காலம்)