ஆளி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்; இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ளதால்தான் தினமும் எடுக்க காரணமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆளி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்; இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ளதால்தான் தினமும் எடுக்க காரணமா?

ஆளி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்; இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ளதால்தான் தினமும் எடுக்க காரணமா?

Priyadarshini R HT Tamil
Nov 03, 2024 09:00 AM IST

ஆளி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ளதால்தான் தினமும் எடுக்க காரணமா? அப்படி என்ன அற்புதங்கள் உள்ளது பாருங்கள்.

ஆளி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்; இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ளதால்தான் தினமும் எடுக்க காரணமா?
ஆளி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்; இத்தனை நற்குணங்கள் நிறைந்துள்ளதால்தான் தினமும் எடுக்க காரணமா?

இதய ஆரோக்கியம்

ஆளி விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. மேலும் உங்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் தமனிகளில் ப்ளேகுக்கள் உருவாகாமல் தடுக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் குடல் நல்ல முறையில் இயங்குகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.

எடை மேலாண்மை

ஃப்ளாக்ஸ் விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்களுக்கு பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்களின் சாப்பிடத் தூண்டும் திறனைக் குறைக்கிறது. இது உங்களின் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஆளிவிதைகளில் லிக்னன்கள் அதிகம் உள்ளது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் உங்களுக்கு வயோதிகத் தோற்றம் இளம் வயதிலேயே ஏற்படாமல் இருக்கிறது. இது உங்கள் சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது.

ஹார்மோன்களை சமப்படுத்துகிறது

இதில் உள்ள இயற்கை ஃபைட்டோஈஸ்ட்ரோஜென்களால், ஆளி விதைகள், மெனோபாஸ் அறிகுறிகளை எளிதாக்குகிறது. இது உடலில் ஹார்மோன்களின் அளவை சமப்படுத்துகிறது. குறிப்பாக பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆளி விதைகள் உதவுகின்றன.

சரும ஆரோக்கியம்

ஃப்ளாக்ஸ் விதைகளில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஏஎல்ஏ, உங்கள் சருமத்தில் உள்ள நீர்ச்சத்துக்களை அதிகரிக்கிறது. சருமத்தின் நெகிழ்தன்மையை மேம்படுத்துகிறது. இது சரும வறட்சி மற்றும் எரிச்சலைக் குறைக்கிறது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள், உடல் சர்க்கரையை உறிஞ்சும் அளவைக் குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது. இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

ஆளிவிதைகளில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலில் நாள்பட்ட வீக்கம், வலி ஆகியவை ஏற்படாமல் காக்கிறது.

ஆளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி

உங்கள் ஸ்மூத்திகள், யோகர்ட்களில் பொடித்த ஆளிவிதைகளை சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால் அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.