சீதாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சீதாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!

சீதாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 05, 2024 10:41 AM IST

சீதாப்பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

சீதாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!
சீதாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!

வைட்டமின்கள் நிறைந்தது

சீதாப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளது. இதில் சி, பி6 மற்றும் ஏ ஆகியவை உள்ளது. மேலும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய மினரல்களும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் சருமத்தை பாதுகாக்கிறது.

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடல் தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீங்கள் சீதாப்பழத்தை அதிகம் உட்கொள்ளும்போது, அது அடிக்கடி உங்களுக்கு சளி மற்றும் சிறிய தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.

நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்டது

சீதாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்கள் குடல் இயக்கத்தை இதமாக்குகிறது மற்றும் செரிமான கோளாறுகளைக் குறைக்கிறது.

கண்களுக்கு நல்லது

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ரிபோஃப்ளாவின்கள், உங்கள் கண் பார்வையை கூராக்குகிறது. இதனால் உங்களுக்கு நல்ல கண் பார்வை கிடைக்கிறது. இதை நீங்கள் தொடர்ந்து உட்கொள்வது, உங்களுக்கு கண் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளைப் போக்குகிறது. இது கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் வயோதிகம் தொடர்பான கண் பிரச்னைகளைப் போக்குகிறது.

சருமத்துக்கு ஊட்டமளிக்கும் வைட்டமின் ஏ சத்துக்கள்

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியான சருமத்தைக் கொடுக்கிறது. இது சருமத்தை பளபளப்பாக்குகிறது. உங்களின் தலைமுடியை வலுவாக்குகிறது. இது ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உங்களுக்கு வயோதிகம் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்கிறது. சரும நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. சருமத்தின் தன்மையையும் மேம்படுத்துகிறது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 உங்கள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் உங்கள் நரம்பு மண்டலத்தின் இயத்துக்கும் உதவுகிறது. இது உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. இது உங்கள் நினைவாற்றல், கவனிக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த மனத்தெளிவையும் மேம்படுத்துகிறது.

இதில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது

சீதாப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு விரைவாக ஆற்றலைக் கொடுக்கிறது. இது உங்கள் உடலில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. உங்களுக்கு மதிய வேளையில் சாப்பிடக் கூடிய சிறந்த ஸ்னாக்ஸாக சீதாப்பழம் உள்ளது. இதை நீங்கள் உடற்பயிற்சிக்கு முன்னரும் சாப்பிடலாம்.

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள்

சீதாப்பழத்தில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. அதற்கு அசிட்டோஜெனின் போன்ற உட்பொருட்கள் உதவுகின்றன. இந்த உட்பொருட்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இது செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது.

கரு வளர்ச்சிக்கு உதவுகிறது

சீதாப்பழம், குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு, நல்லது. இதில் உள்ள ஃபோலேட்கள் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள், உங்கள் உடலில் கரு வளர உதவுகிறது. இது உங்களுக்கு கர்ப்ப காலங்களில் ஏற்படும் காலை நேர நோய்மையைப் போக்குகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை கர்ப்ப காலத்தில் கொடுக்கிறது.

இதயத்துக்கு இதமளிக்கும் ஊட்டச்சத்துக்கள் கொண்டது

சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் ரத்த அழுத்த்தை முறைப்படுத்தி, உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள், வீக்கத்தைக் குறைக்கிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைப் போக்குகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.