தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Nenju Elumbu Soup: சளித்தொல்லை.. வறட்டு இருமலா.. இப்படி காட்ட சாட்டமாக நெஞ்செலும்பு சூப் குடிச்சுபாருங்க!

Mutton Nenju Elumbu Soup: சளித்தொல்லை.. வறட்டு இருமலா.. இப்படி காட்ட சாட்டமாக நெஞ்செலும்பு சூப் குடிச்சுபாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 22, 2023 11:16 AM IST

Mutton Soup: ஜலதோசத்தால் அவதிப்படுபவர்கள் காட்ட சாட்டமாக நெஞ்செலும்பு சூப் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு மிகவும் இதமாக இருக்கும். சளியையும் கட்டுப்படுத்த உதவும்.

நெஞ்செலும்பு சூப்
நெஞ்செலும்பு சூப்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

நெஞ்செலும்பு 1/2 கிலோ

மஞ்சள்

சீரகம்

மிளகு

பூண்டு

இஞ்சி

கொத்தமல்லி

சின்ன வெங்காயம்

தக்காளி

உப்பு

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸியில் மஞ்சள், சீரகம், மிளகு, பூண்டு இஞ்சியை சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ள வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் அம்மியில் வைத்து அரைத்தால் சுவை மிகவும் அருமையாக வரும். பின்னர் சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக அம்மியில் தட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

நெஞ்செலும்பை நன்றாக கழுவி ஒரு ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சின்ன வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரிதாக நன்றாக பழுத்த தக்காளி ஒன்றை சேர்த்து பிசைந்து விட்டு கொள்ள வேண்டும். இதையடுத்து அரைத்து வைத்திருந்த மசாலை சேர்க்க வேண்டும். (இதில் கிராம்பு பட்டை இலவங்கம் பிரியாணி இலை ஆகியவற்றை தேவை என்றால் சேர்த்துக்கொள்ளலாம்) ஆனால் கிராமத்து ஸ்டெயிலில் இதை சேர்க்காமல் செய்தாலும் சுவை நன்றாகவே வரும். தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இப்போது பிரஷர் குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும் ஒரு விசில் வந்ததும். அடுப்பை அணைத்து விட்டு 20 நிமிடம் விட்டு விட வேண்டும், இதையடுத்து குக்கரை திறந்து தேவையான அளவு மல்லித்தழையை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மேலும் கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து சூப்பை தனியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்