Girl Baby Names : ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை உங்கள் செல்ல மகள்களுக்காக தேர்ந்தெடுங்கள்!-girl baby names choose names starting with letter t for your baby girls - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை உங்கள் செல்ல மகள்களுக்காக தேர்ந்தெடுங்கள்!

Girl Baby Names : ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை உங்கள் செல்ல மகள்களுக்காக தேர்ந்தெடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 23, 2024 05:26 PM IST

Girl Baby Names : ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை உங்கள் செல்ல மகள்களுக்காக தேர்ந்தெடுங்கள். இதோ உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Girl Baby Names : ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை உங்கள் செல்ல மகள்களுக்காக தேர்ந்தெடுங்கள்!
Girl Baby Names : ‘த’ என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களை உங்கள் செல்ல மகள்களுக்காக தேர்ந்தெடுங்கள்!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.

ந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

‘த’ வரிசை பெயர்கள்

உங்கள் குழந்தைகளுக்கு ‘த‘ என்ற வரிசையில் வரும் பெயர்களை சூட்டி மகிழுங்கள். தனித்தன்மையான பாரம்பரியமான பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டுங்கள். அதில் பாரம்பரியமும் கலந்திருக்கும். உங்கள் குழந்தைகளின் பெயர்களுக்கு அழகான அர்த்தங்களும் இருக்கும்.

தன்வி

தன்வி என்றால், கருணை என்று பொருள், தன்வி என்ற பெயரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்தால், அது அழகு மற்றும் மென்மையான என்ற அர்த்தத்தை தரும்.

த்ரிஷா

த்ரிஷா என்றால், ஞானம் என்று பொருள். அறிவாற்றலும், ஆர்வமும் நிறைந்த உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டி மகிழுங்கள். இந்த பெயரை வைத்து நீங்கள் அவர்களை அழைக்கும்போது அவர்கள் ஞானிகளாவார்கள்.

தியா

தியா என்பது சிறிய மற்றும் எளிமையான பெயர். இது நேர்மறை எண்ணம் மற்றும் மகிழ்ந்திருக்கும் வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. இந்தக்பெயரை வைத்துள்ள குழந்தைகள் துருதுருவெனு இருப்பார்கள்.

திஷா

திஷா என்றால் உற்சாகம் மற்றும் துடிப்பானவர்கள் என்று பொருள். இந்தப்பெயருக்கு வாழ்வின் ஒளி என்று பொருள்.

தியாரா

தியாரா என்ற பெயரை உங்கள் வீட்டு இளவரசிக்கு சூட்டுவதால், உங்களின் தேவதை தன்னை இளவரசியாகவே உணர்வார். இந்தப் பெயர் கருணை மற்றும் மேன்மை பொருந்தியவர் என்ற அர்த்தத்தையும் தருகிறது.

தேஜல்

தேஜல் என்றால், அறிவாற்றல்மிக்கவர், பிரகாசமானவர், பளபளக்கும் ஆளுமை கொண்டவர் என்பதை குறிக்கிறது. வீட்டின் ஒளியை ஏற்றும் சிறிய குழந்தை என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது.

தனிஷா

தனிஷா என்றால், உறுதியாக இருத்தல் என்று பொருள். வாழ்வில் பெரிய விஷயங்களை சாதிக்க நினைக்கும் பெண்களை குறிக்கிறது. உங்கள் இளவரசியும் சாதனையாளராக வேண்டுமெனில் அவருக்கு இந்தப்பெயரை சூட்டுங்கள்.

திவிஷா

திவிஷா என்றால் ஒளியாக மிளிர்பவள் என்று பொருள். இது வாழ்வின் பிரகாசம் மற்றும் நம்பிக்கையை குறிக்கிறது.

திருப்தி

திருப்தி என்றால் மனநிறைவு என்று பொருள், மனஅமைதி, உங்கள் வாழ்க்கைக்கும், மனதுக்கும் மனநிறைவைக் கொண்டுவருபவர் என்று பொருள். மகிழ்ச்சி மற்றும் நிறைவு என்ற அர்த்தத்தை இந்தப் பெயர் தருகிறது.

தாரிகா

தாரிகா என்றால், இந்த உலகில் இருந்து வெளியே என்று குறிப்பிடுகிறது. தாரிகா என்றால், ஒளிரும் நட்சத்திரம் என்று பொருள். வழிகாட்டும் வெளிச்சம் என்றும் அர்த்தம் வரும். இவர் உங்கள் வாழ்வில் ஒளியேற்ற வந்தவர், வாழ்வின் வழிகாட்டியானவர் என்ற அர்த்தங்களை இந்தப்பெயர் தருகிறது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.