ENNATHA KANNIAYAH NAME REASON: “வரும் ஆனா வராது”! விரக்தி நிலையில் பேசிய வசனம் - என்னத்த கண்ணையா பெயர் சுவாரஸ்ய பின்னணி-famous movie dialogue which turns actor kannaiyah to ennatha kannaiyah who later become popular in vadivelu comedy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ennatha Kanniayah Name Reason: “வரும் ஆனா வராது”! விரக்தி நிலையில் பேசிய வசனம் - என்னத்த கண்ணையா பெயர் சுவாரஸ்ய பின்னணி

ENNATHA KANNIAYAH NAME REASON: “வரும் ஆனா வராது”! விரக்தி நிலையில் பேசிய வசனம் - என்னத்த கண்ணையா பெயர் சுவாரஸ்ய பின்னணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 08:57 AM IST

Tamil Comedy Actor Ennatha Kannaiyah Name Reason: வரும் ஆனா வராது என்ற ஒற்றை வசனத்தை இன்றைய தலைமுறையினர் மத்தியில் பேமஸ் ஆனவர் பழம்பெரும் நடிகர் என்னத்த கண்ணையா. விரக்தி நிலையில் பேசிய வசனம் காரணமாக அவருக்கு இந்த பெயர் மாறியது. அவரது பெயர் பின்னணியும்,என்னத்த கண்ணையா சினிமா பயணமும் பற்றி பார்க்கலாம்

Tamil Comedy Actor Ennatha Kannaiyah Name Reason:“வரும் ஆனா வராது”! விரக்தி நிலையில் பேசி வசனம் - என்னத்த கண்ணையா பெயர் சுவாரஸ்ய பின்னணி
Tamil Comedy Actor Ennatha Kannaiyah Name Reason:“வரும் ஆனா வராது”! விரக்தி நிலையில் பேசி வசனம் - என்னத்த கண்ணையா பெயர் சுவாரஸ்ய பின்னணி

காமெடி, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி தனது எதார்த்த வசன உச்சரிப்புக்கு பெயர் பெற்றவராக என்னத்த கண்ணையா இருந்துள்ளார்.

மதுரை மண்ணன் மைந்தன்

தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக இருந்த என்னத்த கண்ணையாவின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் அய்யாபட்டி. சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் வைரம் என்கிற நாடக குழுவில் இணைந்து பல்வேறு நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

தெளிவான வசன உச்சரிப்பு, அதற்கு ஏற்ப முகபாவனைகளை வெளிப்படுத்துவதில் வல்லவராக இருந்த இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்ற ரசிக்க வைத்த இவர் டி.கே. சண்முகம், எம்.ஜி. சக்கிரபாணி நாடக குழுவில் சேர்ந்த பிரதான நடிகராக மாறி புகழ் பெற்றார்.

மாத சம்பளத்துடன் சினிமா வாய்ப்பு

பக்‌ஷிராஜா என்ற சினிமா கம்பெனி கண்ணையாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை ஒப்பந்த அடிப்படையில் மாத சம்பளத்துடன் தாங்கள் தயாரிக்கும் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தது. ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்த அவர் அந்த கம்பெனியில் இருந்து விலகி மீண்டும் நாடகக் குழுக்களில் இணைந்து நடிக்க தொடங்கினார்.

இதன் பிறகு 1955இல் இருந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடினார். முக்தா சீனிவாசன் இயக்குநராக அறிமுகமான முதலாளி படத்தில் கண்ணையாவுக்கு முக்கிய கேரக்டர் கிடைக்க, அதன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

கண்ணையா, என்னத்தா கண்ணையாவாக மாறியது

முதலாளி படத்தில் நடித்ததன் மூலம் முதலாளி கண்ணாயை என்று இவர் அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ரத்ன குமார், உலகம் சிரிக்கிறது. மரகதம், பாசம், நீ, குமரி பெண், சரஸ்வதி சபதம் என அந்த காலகட்டத்தில் ஹிட்டான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

1967இல் ரவிச்சந்திரன் - ஜெயலலிதா நடித்த நான் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் தோன்றிய கண்ணையா, என்னத்த பேசி, என்னத்த செஞ்சு என பல காட்சிகளில் விரக்தியோடு பேசும் வசனங்கள் மிகவும் பிரபலமானது. அப்போது முதல் முதலாளி கண்ணையா என்னத்தா கண்ணையாவாக மாறினார்.

தொடர்ந்து எம்ஜிஆரின் பல்வேறு படங்களின் தவிர்க்க முடியாத நடிகராக இடம்பிடித்த தனது அற்புத நடிப்பால் முத்திரை பதித்தார். அதேபோல் சிவாஜி கணேசனுடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

1980களில் ரஜினியுடன் இணைந்து நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு, சிவா போன்ற படங்களில் நடித்த நிலையில் மெதுவாக வாய்ப்புகள் குறைய தொடங்கின. இருப்பினும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

வடிவேலுவுடன் கலக்கல் காமெடி

2001இல் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் காமெடியனாக வரும் வடிவேலுவின் தந்தையாக பெரிதாக வசனமே இல்லாமல் காமெடியில் கலக்கியிருப்பார்.

தொட்டால் பூ மலரும் படத்தில் வரும் ஆன வராது என்ற காமெடி மூலம் இந்த கால தலைமுறையினரிடையே ட்ரெண்ட் ஆனார். இந்த படத்தை தொடர்ந்த தவம் படத்தில் பீச் குதிரைகாரராகவும் ஒரே காட்சியில் தோன்று வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

பொதுவாக நடிகர்களுக்கான அடைமொழி அவர்களின் முதல் படம், அவர்களின் கதாபாத்திரம் போன்றவற்றின் அடிப்படையில் ரசிகர்களால் அல்லது திரையுலகினரால் அழைக்கப்பட்டு வந்த நிலையில், தான் பேசி வசனத்தால் பெயரை பெற்ற நடிகராக இருப்பவர் என்னத்த கண்ணையா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.