Girl Baby Name : 'ச' என்ற எழுத்தில் வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் இளவரசிகளுக்கு வைத்து மகிழுங்கள்!-girl baby name names of girls that start with the letter s have fun with your princesses - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Name : 'ச' என்ற எழுத்தில் வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் இளவரசிகளுக்கு வைத்து மகிழுங்கள்!

Girl Baby Name : 'ச' என்ற எழுத்தில் வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் இளவரசிகளுக்கு வைத்து மகிழுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2024 01:06 PM IST

Girl Baby Name : 'ச' என்ற எழுத்தில் வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு வைத்து மகிழுங்கள்.

Girl Baby Name : 'ச' என்ற எழுத்தில் வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் இளவரசிகளுக்கு வைத்து மகிழுங்கள்!
Girl Baby Name : 'ச' என்ற எழுத்தில் வைக்கப்படும் பெண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் இளவரசிகளுக்கு வைத்து மகிழுங்கள்!

அவை வெறும் பெயர்களாக மட்டுமின்றி அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும். இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு வைத்து மகிழுங்கள். ச என்ற எழுத்தில் துவங்கும் பெயர்கள் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும் பெயர்களை நாங்கள் தேர்ந்தெடுத்து இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம்.

சீராத்

சீராத் என்றால், வெளிப்புற அழகைவிட உள்புற அழகு மற்றும் பிரபலம் மற்றும் சிறந்தது என்று பொருள். இந்தப்பெயர், ஆசைப்பட்ட மற்றும் விருப்பப்பட்ட என்று பொருள். உள்ளுக்குள் என்ன உள்ளது என்பதன் முக்கியத்துவம் என்பதை கோடிட்டு காடுவது ஆகும்.

சேஹெர்

சேஹெர் என்பது அழகான பெயர். அது புதிய துவக்கம் என்பதை குறிக்கிறது. இதற்கு பொருள், அதிகாலை மற்றும் விடியல் என்று பொருள். இந்தப்பெயர், புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கை என்பதை குறிக்கிறது.

சியாரா

சியாரா என்றால், தூய்மை என்று பொருள். சியாரா என்பது தூய என்பதுடன் சரியான பொருந்துகிறது. சுத்தமான பெண் என்பதன் அர்த்தம் சியாரா என்பதாகும். தூய இதயம் கொண்டவர் மற்றும் அப்பாவியானவர் என்று பொருள்.

ஷிஷா

ஷிஷா என்றால் மகிழ்ச்சி மற்றும் பரிசு பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சி என்று பொருள். இதற்கு பரிசு, வெகுமானம் என்று பொருள். இது உங்கள் வாழ்வில் உங்கள் குழந்தை கொண்டுவந்த மதிப்புமிக்க மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

ஷிரின்

ஷிரின் என்பது வரலாற்று சிறப்புமிக்க பெயர். இதற்கு தீர்க்கத்தரிசி என்று பொருள். பிற்காலத்தை முன்னுணர்ந்து கூறுபவர் என்று பொருள். இதற்கு அமைதியான மற்றும் நேர்த்தியான உணர்வு என்பது பொருள். இது ஒரு நேர்மையான மற்றும் சிறந்த ஆன்மாவுக்கு சிறப்பான பொருந்தக்கூடிய பொருள்.

ஷிரினா

ஷிரினா என்றால் தெய்வீக சக்தி கொண்டவள் என்று பொருள். ஷிரினா என்பது லட்சுமி தேவியின் பெயர். இதற்கு முன்னாள் நிற்பவர், சிறப்பானவர், முதலானவர் என்று பொருள். இது அழகு மற்றும் சிறப்புவாய்ந்தவர் என்று பொருள்.

சம்யுக்தா

சம்யுக்தா என்பது தெய்வீக சக்தி கொண்டவர் என்ற பொருளைத் தருகிறது. இந்தப் பெயர் துர்காதேவியின் பெயர். பலம் மற்றும் கருணை தேவியின் மற்றொரு பெயர். இது கருணை மற்றும் சக்தியைக் குறிக்கிறது.

ஸ்ராவ்யா

உங்கள் காதுகளுக்கு இதமளிக்கும் பெயர், வேண்டுமென்றால், ஸ்ராவ்யா என்பது அதற்கு சிறப்பான தேர்வு. இதற்கு உங்கள் காதுகளுக்கு இதமானது என்று பொருள். இந்தப் பெயர் கருணை நிறைந்த மற்றும் இசைமயமான பெயர்.

ஸாய்வி

ஸாய்வி என்றால் செல்வம் மற்றும் செழிப்பு என்று பொருள். இதற்கு ஆன்மீகம் அடையாளம் என்பது இதன் அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பை கொண்டுவந்தவர் என்று பொருள். இந்தப் பெயர் உங்கள் வாழ்வில் பிரகாசிக்கும் அதிர்ஷ்டம் என்பதை குறிக்கிறது.

சாய்ஷா

சாய்ஷா என்றால், ஆழ்ந்த ஆசை மற்றும் உண்மை என்பதை குறிக்கிறது. இதற்கு ஆசை மற்றும் பேராசை என்று பொருள். வாழ்வின் உண்மை என்பதை குறிக்கிறது. இந்தப் பெயரின் நோக்கமே உண்மையானவர் என்பதை குறிக்கிறது.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.