Urinary Track Infection : சிறுநீர் பாதை தொற்று, நீர்க்கடுப்பை தடுக்கவேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!
Urinary Track Infection : சிறுநீர் பாதை தொற்று, நீர்க்கடுப்பை தடுக்கவேண்டுமா? இதோ வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
சிறுநீர் பாதை தொற்று ஏற்பட காரணங்கள்?
ஆண்களைவிட பெண்களின் சிறுநீர் பை பெரியது. இதனால் அதில் அதிகளவு சிறுநீர் தேங்கும். அவற்றை உடனுக்குடன் வெளியேற்றாவிட்டால் தொற்றுக்களை ஏற்படுத்தும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், உறக்கமின்மை, சாப்பிடுவதில் முறையின்மையால் ஹார்மோன் மாற்றங்களாலும் சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படும்.
சிறுநீரகப்பாதையில் பல்வேறு காரணங்களால் தொற்றுகள் ஏற்படுகிறது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் சிறுநீரை அடக்கினால் சிறுநீரகப்பாதையில் தொற்று ஏற்படும்.
ஒருவருக்கு தேவையான அளவு தண்ணீர் பருகி, சிறுநீரை வெளியேற்றிவிடவேண்டும். அப்போதுதான் சிறுநீரக பாதையில் மாசுகள் தங்காது.
தேவையான அளவு தண்ணீர் பருகாவிட்டாலும் சிறுநீரகபாதையில் தொற்று ஏற்படும். உட்கார்ந்திருந்தே இடத்திலே செய்யும் வேலை, உடலுக்கு அதிக பயிற்சிகள் இல்லாவிட்டாலும் சிறுநீர்ப்பாதையில் தொற்றுகள் ஏற்படும்.
அதிக தேநீர், காபி, குளிர்பானங்கள் பருகுவதாலும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுகிறது.
உள்ளாடைகளை நன்றாக துவைத்து, காயவைத்து பயன்படுத்தாவிட்டால் சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்படும். எனவே நன்றாக துவைத்த, காய்ந்த உடைகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
நீண்ட தூர பயணம் செய்யும்போது, 8 மணி நேரம் வரை பஸ் அல்லது காரில் பயணம் செய்யும்போது, நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும் உடலில் ஏற்படும் சூட்டால் சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்படும்.
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் தோன்றும் அறிகுறிகள்
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
அடிவயிற்றில் வலி
பின் முதுகில் வலி
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம்
தானாகவே சிறுநீர் கழிப்பது
எடை தூக்கும்போது சிறுநீர் கசிவு
உறங்கும்போது சிறுநீர் கழிப்பது.
ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் பருகவேண்டும். இளநீர், கற்றாழைச்சாறு அடிக்கடி எடுத்துக்கொள்ளவேண்டும்.
சுத்தம்செய்வது எப்படி?
வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து அந்தரங்க உறுப்புகளை கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
பிறப்புறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்கிறேன் என சிலர் அதிகப்படியான வேதிப்பொருட்களை அந்த இடத்தில் பயன்படுத்துவார்கள். அதுவும் தவறு.
கிருமிக்கொல்லிகளையும் அதிகம் பயன்படுத்தக்கூடாது.
பொது கழிவறையை பயன்படுத்தும்போது, கவனம் தேவை.
5ல் ஒருவருக்கு இந்த சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதை போக்க வீட்டிலே உடனடியாக ஒன்றை செய்யவேண்டும்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 5
(சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயமும் பயன்படுத்தலாம்)
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
செய்முறை
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வெந்தயத்தை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதன் சாறுகள் இறங்கியவுடனே மிதமான சூட்டில் பருகலாம்.
சுவைக்காக எதுவும் சேர்க்கத்தேவையில்லை. எனினும், ஒரு சிட்டிகை இந்துப்பு அல்லது அரை ஸ்பூன் சேர்த்து பருகலாம்.
இதை பருகிய சிறிது நேரத்தில் நீர்க்கடுப்பு சரியாகிவிடும். சிறுநீர் பாதை தொற்று காரணமாக, சிறுநீர் கழிக்கும் இடத்தில் எரிச்சல், அரிப்பு, வலி ஆகிய அனைத்தும் குணமாகும். இதை நீங்கள் வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை பருகவேண்டும்.
உங்களுக்கு சிறுநீர் தொற்று இருந்தால் இதை செய்யவேண்டும். சிறுநீர் தொற்றோ அல்லது நீர்க்கடுப்போ ஏற்பட்டவுடனும் இதை பருகினால் உடனடியாக பலன் கிட்டும்.
இந்தப்பிரச்னை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படும். எனவே அவர்கள் கவனமுடன் செயல்படவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்