தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ghee Rice: கமகமக்கும் பாய் வீட்டு நெய்ச்சோறு.. நினைத்தாலே கொண்டாட்டம்தான்

Ghee Rice: கமகமக்கும் பாய் வீட்டு நெய்ச்சோறு.. நினைத்தாலே கொண்டாட்டம்தான்

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 06, 2023 10:30 AM IST

வாங்க பாய் வீட்டு பக்குவத்தில் நெய் சோறு எப்படி செய்வது என பார்க்கலாம்.

நெய்சோறு
நெய்சோறு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி

நெய்

பட்டை

கிராம்பு

அன்னாசிபூ

சோம்பு

பிரியாணி இலை

இஞ்சி

பூண்டு

வெங்காயம்

தக்காளி

புதினா

மல்லி இலை

முந்திரிபருப்பு

தயிர்

உப்பு

செய்முறை

சூடான அடி கனமான பாத்திரத்தில் 50 மில்லி நெய் விட்டு அதில் இரண்டு துண்டு பட்டை , 4 கிராம்பு, 3 அன்னாசிபூ, 4 பிரியாணி இலை ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து கிளற வேண்டும். சோம்பு பொறிந்த பிறகு 3 பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கும் போது அதில் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் ஒரு தக்காளி, 8 பச்சை மிளகாயை சேர்த்து கொள்ள வேண்டும்.

இதில் ஒரு 100 மில்லி தயிரை சேர்த்து கலந்து விட வேண்டும். இதில் ஒரு கைபிடி முந்திரி பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இரண்டு கைபிடி பொடியாக நறுக்கிய மல்லி மற்றும் புதினா இலையை சேர்த்து வதக்க வேண்டும். ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பாலை சேர்த்து கலந்து விட வேண்டும். 

தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது கழுவிய அரிசியை சேர்த்து கலந்து விட வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்த்து  இரண்டு மூன்று முறை கிளறிய பிறகு தண்ணீர் முழுவதையும் அரிசி உறியும் தறுவாயில் மூடி போட்டு கால் மணி நேரம் அடுப்பை சிம்மில் வைத்து தம் போட வேண்டும். அப்பை அணைத்து கால் மணி நேரம் கழித்து பாத்திரத்தைத் திறந்து கிளறி விட்டால் சுடச்சுட பாய் வீட்டு நெய்ச்சோறு ரெடி.

இதில் பெப்பர் முட்டை கிரேவி, ரெட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்