Garlic Benefits : உணவில் தினமும் 4 முதல் 6 பற்கள் பூண்டு சேர்க்கவேண்டும்! அதற்கு உதவும் எளிய வழியைப் பாருங்கள்!
Garlic Benefits : உணவில் தினமும் 4 முதல் 6 பற்கள் பூண்டு சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதற்கு உதவும் எளிய வழியைப் பின்பற்றி பலன்பெறுங்கள்.
தினமும் 4 முதல் 6 பற்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மலைப்பூண்டைவிட சிறிய பூண்டுதான் அதற்கு சிறந்தது. அதை நீங்கள் காலை உணவிலே சேர்த்து சாப்பிடும் வழி ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி செய்தால் தினமும் காலை டிஃபனுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும். உடல் எடை அதிகரிக்க உதவும், ரத்த கொதிப்பு அதிகம் ஆவதைத்தடுக்கும். உடலுக்குள் நுண் கிருமிகள் புகாமல் பார்த்துக்கொள்ளும். மாதவிடாயை சீராக்கும். ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும். இதுபோன்ற பல வழிகளில் அது நமது உடலுக்கு நன்மைகளைத் தருவதால் இந்த பூண்டை நாம் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். எனவே எப்படி சேர்க்கலாம் பாருங்கள். முழு உடலுக்கும் பூண்டு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
தேவையான பொருட்கள்
பூண்டு – 10 பல்
இட்லிப்பொடி அல்லது மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்
காய்ச்சிய நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
பூண்டை தோல் உரித்து எடுத்து சிறிய உரலில் போட்டு தட்டிக்கொள்ளவேண்டும். ஒன்றிரண்டாக அதை தட்டி எடுத்துக்கொண்டு அதில் மிளகாய்ப்பொடி அல்லது இட்லிப்பொடியைப்போட்டு கலக்கவேண்டும்.
இதற்கு வேறு சட்னிகளை தொட்டுக்கொள்ளலாம். அப்போது இதன் சுவை நன்றாக இருக்கும். இந்த இரண்டு பொடிகளுக்கும் பதில் முருங்கைக்கீரைப் பொடியையும் சேர்த்துக்காள்ளலாம்.
அது பூண்டு மற்றும் முருங்கைக்கீரை இரண்டின் குணங்களையும் இரட்டிப்பாக்கும். அதேபோல் நீங்கள் ஆர்த்ரிட்டிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபர் என்றால் பிரண்டைப்பொடியில் போட்டு சாப்பிடலாம். இதனால் உங்களின் ஆர்த்ரிட்டிஸ் நோய் குணமாகிறது.
பூண்டு
பூண்டு அதன் தனித்தன்மையான கார சுவை மற்றும் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. தினமும் உணவில் பூண்டை கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டை மென்று சாப்பிடலாம். அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. அது உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்கிறது. அது என்ன நன்மைகளை உங்கள் உடலுக்கு செய்கிறது என்று பாருங்கள்.
இதய நோய் ஆபத்தை குறைக்கிறது
புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.
பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் கொண்டது.
மூட்டுவலியைப் போக்குகிறது.
செரிமானத்தை அதிகரித்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது
எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தை தருகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்