Gardening Tips : குறைவான வெளிச்சத்தில் கூட எளிதில் வளர்க்கலாம் இந்தச் செடிகளை! தொய்வில்லா தோட்டம்!
Gardening Tips : குறைவான வெளிச்சத்தில் கூட எளிதில் வளர்க்கலாம் இந்தச் செடிகளை! தொய்வில்லா தோட்டம் உங்கள் வீட்டில் அமைக்கலாம்.

உங்கள் வீட்டில் குறைவான சூரியஒளிதான் கிடைக்கும் என்றாலும், நீங்கள் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். அதற்கு இந்த 9 செடிகள் உங்களுக்கு உதவும். குறைந்த ஒளியே தேவைப்படும் செடிகளே போதும். தண்ணீர் மற்றும் சூரிய ஒளியும் தாவரங்கள் வளர அத்யாவசியமான தேவை ஆகும். நல்ல வெளிச்சம் மற்றும் தண்ணீர் இருந்தால்தான் செடிகள் செழித்து வளர்ந்து, பூக்கும். ஆனால், சில செடிகளுக்கு அவை அதிக அளவு தேவைப்படாது. ஆனாலும் அவை வளரும். அவை என்ன செடி என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டில் அதிகம் வெளிச்சம் கிடைக்காவிட்டாலும் நீங்கள் இந்தச் செடிகளை வளர்த்து உங்கள் வீட்டின் அழகை பராமரிக்கலாம். உடனே இந்தச் செடிகளை உங்கள் வீட்டில் வளருங்கள்.
பாம்புச்செடி
பாம்புச் செடி வீட்டில் எளிதில் வளர்க்கக்கூடிய செடிகளுள் ஒன்று. இது மிகவும் அழகான தோற்றம் கொண்டதாக இருக்கும். இதற்கு நேரடி சூரிய ஒளி அதிகம் தேவைப்படாது. பாம்புச் செடிக்கு நீங்கள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலே போதும் நாள் கணக்கில் அதற்கு மீண்டுமம் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. மேலும் அதற்கு மறைமுக சூரிய ஒளியே போதும்.
இசட் இசட் (ZZ Plant)
ZZ செடி அழகாகவும், அடர் பசுமை நிற இலைகளையும் கொண்டதாக இருக்கும். இதன் இலைகள் கண்ணாடி போல் இருக்கும். அது உங்கள் வீட்டுக்கு அழகைத்தரும். இதை வீட்டுக்கு உள்ளே வளர்க்கலாம். இந்தச் செடி வளர்வதற்கு அதிக சூரிய ஒளி தேவையில்லை. நீங்கள் தினமும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலே அவை எளிதில் வளர்ந்துவிடும்.