Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள்!-garden if you find these weeds in your garden pull them out immediately - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள்!

Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 24, 2024 02:56 PM IST

Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள். இல்லாவிட்டால் தோட்டத்தையே அழித்துவிடும்.

Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள்!
Garden : உங்கள் தோட்டத்தில் இந்த களைச் செடிகளைக் கண்டால் உடனே பிடுங்கி எறிந்துவிடுங்கள்!

பார்த்தீனியம்

பார்த்தீனியம் அல்லது காங்கிரஸ் புல் என்று அழைக்கப்படும் இந்த களைச் செடி, இந்தியாவில் வளரும் மிக முக்கியமான களைச் செடியாகும். இந்தச் செடியில் சிறிய, வெண்ணிற, நட்சத்திர வடிவிலான பூக்கள் பூக்கும். இது தோட்டத்தில் ஒன்று வந்தால் கடகடவென அதிகம் வளர்ந்துவிடும். உங்கள் தோட்டத்தில் மற்ற செடிகளின் வளர்ச்சியை இது பாதிக்கும். இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சுவாசக்கோளாறுகளையும் கொண்டுவரும்.

பருப்புக்கீரை அல்லது தரைக்கீரை

இதுவும் இந்தியாவில் காணப்படும் பொதுவான களைச்செடிகளுள் ஒன்றாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவிலும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இது பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இது உங்கள் தோட்டத்தில் இருந்தால் உங்கள் தோட்டத்தை ஒரு நொடியில் சிதைத்துவிடும். எனவே பார்த்தவுடனே இதை வேரில் இருந்து நீங்கள் பிடுங்கி எறிந்துவிடவேண்டும். அப்போதுதான் தோட்டத்தில் உள்ள மற்ற செடிகள் பாதுகாக்கப்படும்.

ஆஸ்துமா செடி

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மற்றொரு களைச் செடியில் முக்கியமானது இந்த ஆஸ்துமா செடி ஆகும். இது சுவாசக்கோளாறுகளை சரிசெய்ய மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுவதால், இதற்கு இந்தப்பெயர் ஏற்பட்டது. ஆனால், இந்தச் செடி வளர்ந்துவிட்டால் அது உங்கள் தோட்டத்தையே அழித்துவிடும். மற்ற செடிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவிடாமல் அனைத்து சத்துக்களையும் இந்தச் செடியே உறிஞ்சிவிடும்.

முள் பாப்பி

முட்கள் நிறைந்த பாப்பி என்பது, உங்கள் தோட்டத்தில் வளர்ந்துவிட்டால், அது தோட்டத்தையே அழித்துவிடும். இந்த களைச்செடியில் விதை காற்றின் மூலம் அனைத்து இடங்களுக்கும் பரவும் தன்மைகொண்டது. எனவே இதன் பெரிய இலைகள் மற்றும் மஞ்சள் மலர்களைப்பார்த்தால் உடனே பிடுங்கி வீசிவிடுங்கள்.

மரப்பூச்சி அல்லது வுட்சோரல்

மரப்பூச்சி என்பது உங்கள் தோட்டத்தையே மொத்தமாக அழித்துவிடும் தன்மைகொண்ட ஒருவகை செடியாகும். இது ஒன்று முளைத்தால், தோட்டம் முழுவதிலும் பரவிவிடும். எனவே இதை உங்கள் தோட்டத்தில் கண்டாலும் நீக்கிவிடுங்கள். இதில் எண்ணற்ற வண்ணத்தில் பூக்கள் பூக்கும் செடிகள் உள்ளன. இந்தச் செடிகள், உங்கள் தோட்டத்தில் நீங்கள் விரும்பி வளர்க்கும் தாவரங்களை அடித்துக்கொண்டு வளர்ந்துவிடும். அதை கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே இந்தச்செடியைப்பார்த்தால் கவனம் தேவை.

ஆர்டிலரி ப்ளான்ட் எனப்படும் அமெரிக்க முள்செடி

ஆர்டிலரி பிளான்டும் சிறிய வகைச் செடிதான். இதுவும் உங்கள் தோட்டத்தில் படர்ந்து வளரும் களைச்செடியாகும். உங்கள் பால்கனி தோட்டத்தில் கூட இந்தச் செடி எளிதாக வளர்ந்துவிடும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் வெடித்து விதைகள் சிதற இந்தச்செடி உங்கள் தோட்டத்தில் எளிதில் பரவிவிடும். இது கடகடவென வளரும் செடியாகும். இதன் வளர்ச்சியை நீங்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்.

எருக்கஞ்செடி

எருக்கஞ்செடி பெரிதாக வளரக்கூடிய ஒரு களைச்செடியாகும். இது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலச்செடியாகும். இதன் இலைகள் பெரிதாகவும், பசுமையாகவும் இருக்கும். இதில் வெள்ளை மற்றும் லாவண்டர் வண்ண பூக்கள் பூக்கும். இந்தப்பூவில் இருந்து வரும் பால், சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் கண்களில் அது பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும்.

நாட்வீட் (knot weed)

சரியான நேரத்தில் இந்த நாட்வீட்டை மட்டும் நீங்கள் அகற்றாவிட்டால், அது உங்கள் தோட்டதத்தின் மொத்த அழகையும் சிதைத்துவிடும். அது உங்கள் தோட்டத்தில் மற்ற எந்தச்செடியையும் வளரவிடாது. அதில் கொத்தாக சிறிய பூக்கள் பூக்கும். இதன் வேர்கள் மண்ணில் படரும். இதனால், அது சத்துக்களை உறிஞ்சிவிடும். இதன் வேர்கள் மிகவும் வலுவானதாக இருக்கும். இது மற்ற சிறிய தாவரங்களின் வேர்கள் படரவிடாமல் தடுக்கும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.