Ginger Lemon Juice Benefits : தினமும் காலையில் இஞ்சி-எலுமிச்சை சாறை பருகுவதால் உங்கள் உடலுக்கு என்ன கிடைக்கும்?
Ginger Lemon Water Benefits : தினமும் காலையில் இஞ்சி-எலுமிச்சை சாறை பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை மற்றும் இஞ்சி சாறை பருகும்போது, உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் வேகவேகமாக வெளியேறும். எலுமிச்சை மற்றும் இஞ்சியின் குணங்கள் உங்கள் உடல் விரைந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். உங்கள் உடலின் செரிமான மண்டலத்தைப் சுத்தம் செய்யும். உங்கள் கல்லீரலின் இயக்கத்தை அதிகரிக்கும்.
தினமும் 100 முதல் 150 மில்லி லிட்டர் வரை இந்த பானத்தை நீங்கள் பருகும்போது, அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கொழுப்பை எரிக்கிறது. அது மூட்டு வலியைக்கை குறைக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்து தொற்றுக்களை அடித்து விரட்டும்.
இந்த பானத்தை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
இஞ்சி – ஓரு இன்ச்
எலுமிச்சை – 1
கிரீன் ஆப்பிள் – 1
(இந்த பானத்துக்கு கூடுதல் சுவையைத்தரும். மேலும் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும்)
செய்முறை
மூன்றையும் சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சையின் சுவை அதிகமாக இருந்தால், அதன் சாறை மட்டும் பிழிந்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சையை அப்படியே மிக்ஸியில் சேர்க்கவேண்டாம்.
இந்த பானத்தை வடிகட்டி அப்படியே பருகலாம். ஆனால், உங்களுக்கு அதை பருக சிரமமாக இருந்தால், அதனுடன் சிட்டிகை இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது தேன் சேர்க்கலாம்.
அது உங்களுக்கு சுவையும், கூடுதல் நன்மைகளையும் தரும். இந்த பானத்தை 7 நாட்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இது நல்ல பலனைத்தரும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்கு 50 மில்லி லிட்டர் அளவு வரை கொடுக்கலாம். பெரியவர்கள் 150 மில்லி லிட்டர் அளவு வரை எடுத்துக்கொள்ளலாம். இதை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 7 நாட்கள் செய்யவேண்டும்.
இதுபோன்ற பயனுள்ள எண்ணற்ற மருத்துவக்குறிப்புக்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே இதுபோன்ற குறிப்புகளை தெரிந்துகொள்ள நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்