ஃப்ளாட் பெல்லி சீக்ரெட்! காதை கொடுங்கள் தொங்கும் தொப்பை குறைக்கும் வழிகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஃப்ளாட் பெல்லி சீக்ரெட்! காதை கொடுங்கள் தொங்கும் தொப்பை குறைக்கும் வழிகள் இவைதான்!

ஃப்ளாட் பெல்லி சீக்ரெட்! காதை கொடுங்கள் தொங்கும் தொப்பை குறைக்கும் வழிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Oct 13, 2024 07:00 AM IST

தொங்கும் தொப்பை குறைத்து தட்டையான வயிறு பெறும் இயற்கை வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

ஃப்ளாட் பெல்லி சீக்ரெட்! காதை கொடுங்கள் தொங்கும் தொப்பை குறைக்கும் வழிகள் இவைதான்!
ஃப்ளாட் பெல்லி சீக்ரெட்! காதை கொடுங்கள் தொங்கும் தொப்பை குறைக்கும் வழிகள் இவைதான்!

வயிறு உப்புவதற்கான காரணங்கள்

அதிகம் சாப்பிடுவது – நீங்கள் அதிகம் சாப்பிட்டாலும் வயிற்றில் உப்புசம் ஏற்படும்.

உணவுத் தேர்வுகள் – அதிகம் சோடியம் நிறைந்த உணவுகள், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகள் ஆகியவை வயிறு உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை.

நார்ச்சத்துக்கள் குறைவு – நீங்கள் உட்கொள்ளும் உணவில் போதிய அளவு நார்ச்சத்துக்கள் கிடைக்காவிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மனஅழுத்தம் – உங்கள் உடலில் அதிளவில் கார்டிசால் சுரந்தால், அது உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக தொப்பையை அதிகரிக்கும்.

உட்கார்ந்த வாழ்க்கை முறை – நீங்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவராக இருந்தால் உங்கள் உடலில் அதிகம் கொழுப்பு சேர்ந்துவிடும். அது உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்க உதவும்.

வயிற்றை தட்டையாக்கும் இயற்கை உட்பொருட்கள்

சில உட்பொருட்கள் உங்களின் வயிறு உப்புசத்தைக் குறைத்து, தட்டையான வயிறைப் பெற வழிவகுக்கும்.

இஞ்சி - வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இது செரிமானத்தை அதிகரித்து, வயிறு உப்புசத்தைக் குறைக்கும்.

எலுமிச்சை – எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. உடலின் வளர்சிதையை எலுமிச்சை அதிகரிக்கிறது.

வெள்ளரி – வெள்ளரியில் அதிகளவில் நீர்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, உங்கள் உடலுக்கும் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது.

கிரீன் டீ – கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்கும். உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் – இதில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் உட்பொருட்கள் உள்ளது. இது சாப்பிடவேண்டும் என்ற வேட்கையை தவிர்க்கும்.

சியா விதைகள் – சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பசியை அதிகரிக்கும், செரிமானத்தை ஊக்குவிக்கும்.

தட்டையான வயிறு பெறுவதற்கு உதவும் இயற்கை ரெசிபிக்கள்

வெள்ளரி, புதினா சாலட்

தேவையான பொருட்கள்

வெள்ளரி – 1

புதினா – கைப்பிடியளவு

எலுமிச்சை சாறு – சிறிதளவு

உப்பு மற்றும் மிளகுத்தூள் – சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரி, புதினாவை சேர்த்து அதில் உப்பு மற்றும் மிளகுத்தூளை தூவி கலந்து சாப்பிடவேண்டும். இது உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுத்து, உங்கள் உடலில் அதிகம் உள்ள சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது.

கிரீன் டீ ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்

கிரீன் டீ – 1 கப்

வாழைப்பழம் – 1

கீரை – ஒரு கப்

சியா விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

ஐஸ் க்யூப்கள் – சிறிதளவு

செய்முறை

அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து, உடனே பருகவேண்டும். இந்த ஸ்மூத்தி உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வயிறு நிறைந்த உணர்வு இரண்டையும் தருகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் பானம்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் சைடர் வினிகர் – 2 ஸ்பூன்

தண்ணீர் – ஒரு கப்

தேன் – சிறிதளவு

பட்டைப் பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு டம்ளரில் ஆப்பிள் சைடர் வினிகர், தண்ணீர், தேன், பட்டைப்பொடி என அனைத்தையும் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் பருகவேண்டும். இந்த பானம் செரிமானத்தை தூண்டுகிறது. ரத்த சர்க்கரையை முறைப்படுத்த உதவுகிறது. பசியைக் குறைக்கிறது.

சியா புட்டிங்

தேவையான பொருட்கள்

சியா விதைகள் – கால் கப்

பாதாம் பால் – ஒரு கப்

தேன் – ஒரு ஸ்பூன்

பழ சாலட் – ஒரு கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சியா விதைகள் பால் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். ஓரிரவு வரை கூட வைக்கலாம். காலையில் எழுந்து பழங்கள் கலந்து இதை காலை உணவாகவே எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு நார்ச்சத்தை வழங்குவதுடன், வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து செரிமானத்துக்கும் உதவும்.

இதை முயற்சிக்கும்போது, நீங்கள் இதனுடன் சேர்த்து பின்பற்றவேண்டும். அது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க உதவும்.

நீர்ச்சத்துடன் இருக்கவேண்டும் – உடலுக்கு நீர்ச்சத்து என்பது மிகவும் தேவையான ஒன்று. எனவே நீங்கள் நாள் முழுவதும் நீர்ச்சத்துடன் இருக்கவேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும்.

உடற்பயிற்சி – உங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா அல்லது ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் தினமும் அல்லது வாரத்தில் 5 நாட்கள் செய்யவேண்டும்.

சாப்பிடுவதில் கவனம் – நீங்கள் உணவு சாப்பிடும்போது கவனம் தேவை. அதிகமாக சாப்பிடுவதை தடுக்க நீங்கள் மெதுவாக சாப்பிடவேண்டும்.

போதிய அளவு உறக்கம் – தினமும் 7 முதல் 9 மணி நேரம் உறங்கவேண்டும். இரவு உறக்கம் மிகவும் முக்கியமானது. இது உங்களின் பசி ஹார்மோன்கள் நன்றாக சுரக்க உதவும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபிக்களில் ஏதாவது ஒன்றை இரு வாரங்களுக்கு பின்பற்றவேண்டும். இவற்றை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி செய்யவேண்டும். உடனே இந்த ஆரோக்கிய அன்றாடங்களை பின்பற்றும்போது அது உங்களுக்கு ஃப்ளாட் பெல்லியைக் கொடுக்கிறது.

உங்களுக்கு தட்டையான வயிறு வேண்டுமென்றால், சரிவிகித உணவு, வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கிய வாழ்க்கை முறை தேர்வுகள் என இருப்பது நல்லது. எனவே செரிமானத்தை அதிகரித்து, வயிறு உப்புசத்தைக் குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.

இதை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். இதை நீங்கள் எப்போதாவது செய்யக்கூடாது. செய்தால் பலன் கிட்டாது. எனவே தொடர்ந்து இரு வாரங்கள் 2 கப் தினமும் பருகவேண்டும். காலை, மாலை சிறப்பான நேரம். எனவே பின்பற்றி பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.