Pets Foods: “Take Care Your Pets Please” வளர்ப்பு பிராணிகளுக்கும் ஒவ்வாமை தரும் உணவுகள் பற்றி தெரியுமா?-feed right foods to your pets for perfect health - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pets Foods: “Take Care Your Pets Please” வளர்ப்பு பிராணிகளுக்கும் ஒவ்வாமை தரும் உணவுகள் பற்றி தெரியுமா?

Pets Foods: “Take Care Your Pets Please” வளர்ப்பு பிராணிகளுக்கும் ஒவ்வாமை தரும் உணவுகள் பற்றி தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 17, 2024 06:01 PM IST

வளர்ப்பு பிராணிகளும் உணவு சகிப்புத்தன்மை காரணமாக பாதிப்பில் சிக்கி தவிப்பது உங்களுக்கு தெரியுமா? காது பகுதிகளில் நாள்பட்ட வீக்கம், இரைப்பை குடல் பிரச்னை, வயிற்றுப்போக்கு, பின்பகுதிகளில் ஊறல் போன்ற பல்வேறு பிரச்னைகள் உணவு ஒவ்வாமை காரணமாக செல்லப்பிராணிகளுக்கு நிகழ்கின்றன.

வளர்ப்பு பிராணிகளுக்கு தர வேண்டிய உணவுகளில் கவனம் தேவை
வளர்ப்பு பிராணிகளுக்கு தர வேண்டிய உணவுகளில் கவனம் தேவை

உங்கள் செல்ல பிராணிகளுக்கு உணவில் சகிப்புத்தன்மை ஏற்படாமல் இருக்கவும், சரிவிகித ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து கொப்பதற்கான சில வாய்ப்புகளை பார்க்கலாம்

ஆர்கானிக் உணவுகள்

நாம் எந்த உணவு வாங்கினாலும் அதன் லேபிளை சரி பார்க்கும் பழக்கம் தற்போது அதிகமாகியுள்ளது. ஆனால் செல்ல பிராணிகள் என்று கொண்டாடப்படும் விலங்குகளுக்கு உணவுகள் வாங்கும்போது மேற்கூறியதை செய்யாமல் இருக்கிறோம். பெரும்பாலான பிராணிகள் உணவுகளில் அவை உடலுக்கு பொருந்தாத சில சேர்மாணங்களும், துணை பொருள்களும், தயாரிப்புகளும் சேர்க்கப்படுகின்றன. எனவே அதை கவனித்தில் கொள்வதும் மிக அவசியம்.

இதுபற்றி செல்ல பிராணிகளுக்கான ஆர்கானிக் உணவுகளை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் அக்‌ஷய் குப்தா கூறும்போது, "நாங்கள் 100 சதவீதம் உண்மையான பொருள்களை மட்டுமே உணவுப் பொருள்களில் பயன்படுத்துகிறோம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இல்லாமலும், வேறெதுவும் துணை பொருள்கள் மற்றும் தயாரிப்புகள் இல்லாமலும் தயார் செய்யப்படுகிறது. அத்துடன் சல்பேட்டுகள், பாரபென்கள், சிலிகான்கள் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் சேர்மானங்கள் எதுவும் இல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்தில் பேக் செய்யப்படுகிறது. இதனால் ஏரோபிக் போன்ற பாக்டீரியாக்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. இதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

நன்மைகள்

ஆர்கானிக் உணவுகளில் செயற்கை நிறமிகள், சுவை அதிகரிப்பான்கள், ரசாயன சேர்க்கைகள் போன்றவை இல்லாத காரணத்தினால் உங்கள் செல்லப்பிராணிகளின் தோல்களில் வியாதி ஏற்படுவது மற்றும் ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்கலாம்.

மரபணு மாற்றப்படாத உணவுகள்

மனிதர்களுக்கான மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறித்து காலம் காலமாக பேசப்பட்டு வருகிறது. அதேசமயம் செல்லப்பிராணிகளுக்கு இந்த வகை உணவுகள் கொடுப்பது பற்றி பெரிதாக பேச்சுக்கள் ஏதும் இல்லை. ஜிஎம்ஓ என்று அழைக்கப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மரபணு மாற்றப்படாத செல்லப்பிராணிகளின் உணவுகள், இயற்கையான உருவான பொருள்களை கொண்டு உலர்ந்தோ அல்லது கேன்களில் அடைக்கப்பட்டோ வருகிறது. இவை ஆய்வகங்களில் மரபணு மாற்றம்செய்யப்படுவதை விட சிறப்பானது. இயற்கையாக சேர்மானங்கள் நிறைந்த உணவுகளான புதிய இறைச்சிகள் போன்றவற்றை சேர்த்து உங்கள் பிராணிகளுக்கு கொடுப்பதினால் நேர்மறையான தாக்கங்களை நீங்கள் கண்கூடாக காணலாம்.

வீட்டில் சமைத்த உணவுகள் பிராணிகளின் ஒட்டுமொத்த நலனுக்கு சிறப்பாகவே உள்ளது. எனவே அவைகளுக்கு வழங்கும் உணவுகளில் சிக்கன், மட்டன் இறைச்சிகள் அல்லது கல்லீரல், இதயம் போன்று உறுப்புகளின் இறைச்சிகள், பூசிணி, கேரட், பிரவுண் அரிசி போன்றவையும் இருக்கலாம்.

நன்மைகள்

இந்த வகை உணவுகளினால் பிராணிகளின் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். அத்துடன் அதன் ஆற்றல் அளவும் அதிகரித்து, ரோமங்கள் பளபளப்பாகவும், வாசமாகவும் இருக்கிறது. அதேபோல் ஊட்டச்சத்துகள் மிகுந்த இதுபோன்ற உணவுகள் அவைகளின் பார்வைத்திறனை அதிகரித்து, செரிமான அமைப்பையும் சீராக வைக்க உதவுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதும் தவிர்க்கப்படுகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.