ஆர்கானிக் பெயரில் வரும் அனைத்து உணவுகளும் இயற்கையானதா? தெரிந்து கொள்வோம்-are foods labelled as organic more nutritious lets find out - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆர்கானிக் பெயரில் வரும் அனைத்து உணவுகளும் இயற்கையானதா? தெரிந்து கொள்வோம்

ஆர்கானிக் பெயரில் வரும் அனைத்து உணவுகளும் இயற்கையானதா? தெரிந்து கொள்வோம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 13, 2021 07:06 PM IST

ஆர்கானிக் உணவுகள் என இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மீது பொதுமக்கள் பார்வை அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க பலரும் சாப்பிடுகிறார்கள். உண்மையில் ஆர்கானிக் என்ற லேபிள் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் இயற்கையானதா என்ற கேள்விக்கு பலராலும் ஆம் என்று பதிலை உறுதியாக கூற முடியாது.

<p>ஆர்கானிக் எனக் கூறப்படும் உணவுகளில நன்மைகள் உள்ளதா</p>
<p>ஆர்கானிக் எனக் கூறப்படும் உணவுகளில நன்மைகள் உள்ளதா</p>

ஆர்கானிக் உணவு என்றால் என்ன?

இயற்கையான உணவு முறை மற்றும் இயற்கையான நுட்பங்களில் தயாராகும் உணவுகள் ஆர்கானிக் உணவு எனப்படுகிறது. அப்படியென்றால் இயற்கையாக விளைவிக்கும் பொருள்களில் எந்த விதமான பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 

அதேபோல் விலங்குகளுக்கு எந்த விதமான ஆன்டிபாயடிக்குகள் செலுத்தாமலும், வளர்ச்சிக்கான ஹார்மோன்கள், வேறெந்த விதமான துணைப்பொருள்களும் செலுத்தாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு இயற்கையாக முறையில் விளைவிக்கப்படும் பொருள் என்பதால், இதன் விலையும் வழக்கமாக சாப்பிடும் உணவுகளிலிருந்து சற்று அதிகமாகவே உள்ளது.

<p>நீங்கள் சாப்பிடும் உணவுகளே உங்களது ஆரோக்கியத்துக்கு பொறுப்பாக உள்ளது</p>
நீங்கள் சாப்பிடும் உணவுகளே உங்களது ஆரோக்கியத்துக்கு பொறுப்பாக உள்ளது

ஆர்கானிக் உணவுகள் ஆரோக்கியமானது என்ற கருத்து உண்மையெனில், அதற்கு சில தகுதிகள் இருப்பது அவசியமாகிறது. ஆர்கானிக் மற்றும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு இடையே ஊட்டச்சத்து அளவுகளில் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை. (புரதம், கொழுப்பு, கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்து) ஆனால் வேறு சில கலவை வேறுபாடுகள் நன்மையை தருபவையாக இருக்கலாம்.

அதிகப்படியான ஆன்டிஆக்சிடன்ட்கள்

ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியான பினோலிக் கலவை (ஆன்டிஆக்ஸிடன்ட்கள்) இடம்பெற்றுள்ளது

அதிகமான ஒமேகா 3 அமிலங்கள்

ஆர்கானிக் பால் சார்ந்த பொருள்கள், இறைச்சிகளில் அதிகமான ஒமேகா 3 கெழுப்பு அமிலங்கள் உள்ளது. இது வழக்கமான உணவு பொருள்களை ஒப்பிடும்போது அதிகம்தான்.

குறைவான நச்சுத்தன்மை

ஆர்கானிக் உணவுகளில் குறைவான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கின்றன. அதேபால் காட்மியம் உள்பட கன உலோகங்கள் உள்ளன. ஆன்டிபாயோடிக் எதிர்ப்பு பாக்டீரியாவின் வெளிப்பாட்டை குறைக்க உதவுகிறது.

வழக்கமான ஊட்டச்சத்துகளிலிருந்து மேற்கூறிய சில மாற்றங்கள் ஆர்கானிக் உணவுகள் மூலம் உடலில் ஏற்படுகிறது. அதேசமயம் இந்த நன்மைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தவும், எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்னையை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. ஏனென்றால் ஆர்கானிக் உணவு உண்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

<p>உங்கள் உணவில் அனைத்து வண்ணங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்</p>
உங்கள் உணவில் அனைத்து வண்ணங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்

மேற்கூறிய ஆரோக்கிய நன்மைகளை வைத்து ஆர்கானிக் உணவுகள் என்று கூறப்படும் பொருள்கள் அனைத்திலும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது எனக் கருதலாமா?

இதற்கு இல்லை என்பதே விடையாக எப்போதும் உள்ளது. ஆர்கானிக் எனப் பெயருடன் வரும் அனைத்து உணவுகளிலும் ஊட்டச்சத்துகள் அடர்த்தியாக இருப்பதில்லை. 

ஆர்கானிக் அல்லாத உணவுகளை ஒப்பிடுகையில், அது சிறந்த தேர்வு எனக் கருதினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்கானிக் உணவுப் பொருள்களிலும் சிலவை அதிகமாக பதப்படுத்தப்படுகிறது. இதனால் கலோரிகள் கூடுதலாக இருப்பது, சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவை அதிகமாக இடம்பெறுவதுமாக உள்ளது.

உதரணமாக ஆர்கானிக் குக்கீஸ், சிப்ஸ், ஐஸ்கிரீம் இயற்கையாக தயார் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டாலும், ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாகவே உள்ளது.

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் முன் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், மேக்ரோ ஊட்டச்சத்து எனப்படும் கார்ப்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்சத்து அளவுகளும், மைக்ரோ ஊட்டச்சத்து எனப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவையும் கணக்கீடு செய்து பார்க்க வேண்டும். 

இதன் பின்னர் ஆர்கானிக் தேவையா அல்லது வழக்கமான உணவே போதுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

நீங்கள் முழுவதுமாக ஆர்கானிக் அல்லது ஆர்கானில் அல்லாத என இரண்டு வகை உணவுகளையும் இணைத்து சாப்பிட முடிவு செய்தால், இதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்

பல்வேறு விதமான உணவு ஆதரங்களில் இருந்து பல வகையான உணவுகளை தேர்ந்தெடுங்கள். இவை சிறந்த ஊட்டச்சத்து கலவையை உங்களுக்கு தருகிறது. 

பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்த பருவநிலைக்கு தகுந்தவாறு உள்ளூரில் விளைந்ததை வாங்குங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள லேபிள்களை நன்கு படியுங்கள்.

ஆர்கானிக் என்று மட்டும் குறிப்பிட்டிருப்பதால் அது ஆரோக்கியமான பொருள் எனவும், சிறந்த மாற்று எனவும் முடிவுக்கு வர வேண்டாம். 

சில உணவுகள் இயற்கையானது எனத் தெரிவித்திருந்தாலும் இனிப்பு, உப்பு, கலோரிகள் போன்றவை அதிகமாகவே உள்ளன. தண்ணீரில் நன்கு கழுவி பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதால் அதிலுள்ள அழுக்குகள் மட்டுமில்லாமல், பாக்டீரியாக்கள், ரசாயணங்கள் போன்றவையும் நீங்கும்.

 

 

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.