Fatty Liver : ஃபேட்டி லிவரால் அவதியா? அது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்து தடுக்கலாம்? இதோ வழிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fatty Liver : ஃபேட்டி லிவரால் அவதியா? அது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்து தடுக்கலாம்? இதோ வழிகள்!

Fatty Liver : ஃபேட்டி லிவரால் அவதியா? அது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்து தடுக்கலாம்? இதோ வழிகள்!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2024 04:28 PM IST

Fatty Liver : ஃபேட்டி லிவரால் அவதியா? அது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்து தடுக்கலாம்? இதோ வழிகள்!

Fatty Liver : ஃபேட்டி லிவரால் அவதியா? அது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்து தடுக்கலாம்? இதோ வழிகள்!
Fatty Liver : ஃபேட்டி லிவரால் அவதியா? அது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்து தடுக்கலாம்? இதோ வழிகள்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ஃபேட்டி லிவர் ஏற்பட காரணம்?

அந்த காலத்தில் மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் ஃபேட்டி லிவர் அதாவது கொழுப்பு கல்லீரல், கல்லீரலில் கொழுப்பு சேர்வது என்ற பிரச்னை இருந்தது. ஆனால் இப்போது, இந்தப் பிரச்னை மது அருந்தாதவர்களுக்கும் ஏற்படுகிறது. அதற்கு காரணம் வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமேயாகும்.

மேலும் அதிக உடல் எடை, இனிப்பு சர்க்கரை அதிகம் எடுத்துக்கொள்வது, அதிக அரிசி உணவுகள் எடுத்துக்கொள்வது இவையெல்லாம் உங்களுக்க ஃபேட்டி லிவர் என்ற பிரச்னை ஏற்பட காரமாகிறது. அரிசி உணவையே அதிகம் எடுத்துக்கொள்வதும், உடலில் சர்க்கரையாக மாறுகிறது.

120 கிராம் சர்க்கரையை மட்டும்தான் கிளைக்கோஜென்களாக கல்லீரல் சேமிக்க முடியும். ஆனால் அதைவிட அதிகளவு நாம் எடுத்துக்கொள்ளும்போது, அது கொழுப்பாகி கல்லீரலில் படிந்துவிடுகிறது.

கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்புக்களை கட்டுப்படுத்தவேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சர்க்கரையை ஆற்றலாக மாற்றாமல் கல்லீரலில் கொழுப்பாக படியும்.

இதுபோல் ஃபேட்டி லிவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிறு உப்புசம் இருக்கும். காலையில் தட்டையாக இருக்கும் வயிறு மாலையில் உப்பும். தொப்பை, பித்தப்பை கல், மஞ்சள் காமாலை என அனைத்துக்கும் இதுதான் காரணமாகிறது.

ஃபேட்டி லிவருக்கு என்ன செய்யலாம்?

இதற்கு இன்டர்மிடன்ட் பாஸ்ட், விரதம் உதவுகிறது. இது கல்லீரலில் தேங்கும் கொழுப்பை கரையச்செய்கிறது. சாப்பிடுவதற்கு 8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் இடைவெளி எடுத்து சாப்பிடவேண்டும். இந்த விரதத்திலும், அவர்கள் கார்போஹைட்ரேட்டை குறைத்துவிட்டு, நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவும், புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவும் எடுத்துக்கொண்டாலே போதும்.

இந்த ஃபேட்டி லிவர் சரியாகும். ஆனால் கொழுப்பு மாத்திரை எடுத்துக்கொண்டு, கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு அது நன்மை கொடுக்காது.

இரவு 9 மணி முதல் 11 மணி வரைதான் கல்லீரல் சுத்தமாகும் நேரம். அப்போது நாம் உறங்கினால்தான் கல்லீரல் சுத்தம் செய்யப்படும். இல்லாவிட்டால் சுத்தமாகாது. அந்த நேரத்தில் மது அருந்தும்போது அது குணமாகாது.

பித்தப்பை கல்

பித்தப்பை சுத்தமாகும் நேரம் இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை அப்போது விழித்திருந்தால், பித்தப்பையில் கல் வரும். எனவே கல்லீரல் ஆரோக்கியத்துக்கு இரவு உறக்கம் கட்டாயம் வேண்டும். இவற்றையெல்லாம் தடுத்தால் இந்த ஃபேட்டி லிவர், பித்தப்பை கல், கணைய வீக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும்.

ஃபேட்டி லிவர் உள்ளவர்கள் கவனமாக இருந்து இவற்றையெல்லாம் தவிர்த்து நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.