உலக கல்லீரல் அழற்சி நாளான இன்று கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jul 28, 2024
Hindustan Times Tamil
ஆண்டுதோறும் ஜூலை 28ஆம் தேதி கல்லீரல் அழற்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கல்லீரல் ஏற்படும் அழற்சி, பாதிப்புகள், அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
கல்லீரல் நோய் பாதிப்புகளின் அபாயத்தை குறைக்கவும், தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றத்தை பார்க்கலாம்
ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது
கல்லீரல் அழற்சி, கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை போன்ற நோய் பாதிப்புகளை தடுக்க ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும். ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடவும்
பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்க்க வேண்டும்
இந்த வகை உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் செரிமான ஆவதற்கு கடினமாக இருக்கும்
உடல்பயிற்சி தவறாமல் செய்தல்
அன்றாடம் உடல்பயிற்சி செய்வது பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. இதன் மூலம் செரிமான மேம்பட்டு, உடலை பிட்னஸாக வைத்துக்கொள்வதோடு எடை இழப்பையும் ஊக்கப்படுத்துகிறது
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது
உடல் பருமன் கல்லீரல் வீக்கம் நோய் பாதிப்பை உருவாக்கும் முக்கிய காரணியாக இரு்கிறது. எனவே ஆரோக்கியமான பிஎம்ஐ பராமரிப்பது மிகவும் அவசியமாகும்
தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்
கல்லீரல் அழற்சி ஏ மற்றும் பி பாதிப்பை தடுக்கும் விதமாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
கல்லீரல் சார்ந்த நோய் பாதிப்பு, கல்லீரல் செயலிழப்புக்கு முக்கிய காரணமாக மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. எனவே இதை தடுக்கும் பொருட்டு மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி விவகாரத்து விவகாரம் குறித்து சுசித்ரா பேசி இருக்கிறார்.