Veg Oats Idly : உடல் எடையை சீராக்கும் வெஜ் ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி? செம ஈஸி ரெசிபி இதோ!
Veg Oats Idly: நாள்தோறும் ஓட்ஸ் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, உடலின் சர்க்கரை அளவை சீராக வைதிருத்தல், செரிமானத்தை சரியாக இயங்க உதவுதல் என உடலின் பெரும்பான்மையான குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது.
நாள்தோறும் ஓட்ஸ் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, உடலின் சர்க்கரை அளவை சீராக வைதிருத்தல், செரிமானத்தை சரியாக இயங்க உதவுதல் என உடலின் பெரும்பான்மையான குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. இத்தகைய பலன்களை அளிக்கும் ஓட்ஸை வைத்து ஓட்ஸ் இட்லி தயாரிக்கும் முறையை காண்போம்.
வெஜ் ஓட்ஸ் இட்லி செய்ய தேவையான பொருட்கள்
ஒரு கப் ஓட்ஸ், ஒரு கப் ரவை, தயிர் ஒரு கப் , கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவைகளை நறுக்கி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவுள்ள இஞ்சி, 2 பச்சை மிளகாய், தாளிக்க தேவையான கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை ,கொத்தமல்லி தழை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு வேண்டும்.
செய்முறை
முதலில் ஒரு கப் அளவுள்ள ரவை, ஓட்ஸ், தயிர் மூன்றையும் சேர்த்து கலக்க வேண்டும், தேவையான தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவு பதம் வரும் வரை கரைக்க வேண்டும். இப்போது மாவில் சேர்க்க வேண்டிய தாளிப்பை தயார் செய்ய வேண்டும்.தாளிப்பு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவைகளையும், கொத்தமல்லி, மிளகாய், இஞ்சியையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை கலந்து வைத்த மாவில் சேர்க்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து அந்த மாவு கலவையை இட்லி பாதிரத்தில் ஊற்றி சரியாக 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சுவையான வெஜ் ஓட்ஸ் இட்லி தயார். இட்லியுடன் மல்லி சட்னி, தக்காளி சட்னி போன்ற சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும்.
ஓட்ஸின் நன்மைகள்
கோதுமையை போல ஓட்ஸ் ஒரு தானிய வகையாகும். இது குதிரைகளுக்கு உணவாக பயன்படுத்தபடுவதும் உண்டு. இந்நிலையில் பல நாடுகளில் உள்ள மக்கள் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுகின்றனர். தொடர்நது ஓட்ஸ் சாப்பிட்டு வார மலச்சிக்கல் பூரணமாக குணமடையும் எனக் கூறப்படுகிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான இயக்கத்தின் முக்கிய உறுப்பான குடலை சீராக இயங்க உதவுகிறது. ஓட்ஸில் உள்ள அழற்சி எதிர்ப்பி குணங்கள், மேனியை மென்மையாக வைதிதிருக்க உதவுகின்றன. உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருக்கவும் ஓட்ஸ் பயன்படுகிறது. இந்தியாவிலும் பல தரப்பட்ட உணவாக ஓட்ஸ் பயன்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு உணவாகவும் ஓட்ஸ் மாறி வருகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்