தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dry Nuts Laddu: உடலுக்கு சத்தான ட்ரை நட்ஸ் லட்டு.. இப்படி செய்து பாருங்க

Dry Nuts Laddu: உடலுக்கு சத்தான ட்ரை நட்ஸ் லட்டு.. இப்படி செய்து பாருங்க

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 16, 2023 12:27 PM IST

மிக மிக ஆரோக்கியமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நல்லது ட்ரை நட்ஸ் லட்டு

லட்டு
லட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பாதாம்

முந்திரி

கொப்பரை தேங்காய்

பிஸ்தா

தேங்காய்

கசகசா

பேரிச்சம்பழம்

அத்திப்பழம்

உப்பு

நெய்

ஏலக்காய்

சர்க்கரை

செய்முறை

100 கிராம் பாதாம் , 100 கிராம் பிஸ்தா, 100 கிராம் முந்திரியை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதில் 100 கிராம் கொப்பரை தேங்காயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இந்த பொருட்களை அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். 

சிறிது நேரம் கழித்து கசகசாவையும் சேர்த்து வறுக்க வேண்டும். வறுக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். நன்றாக வறுத்த பொருட்களை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும். ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 100 கிராம் நறுக்கி வைத்த அத்திப்பழம், நறுக்கிய பேரிச்சம் பழம், நறுக்கிய திராட்சை ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். 

இதை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பொருட்களை நன்றாக ஆற விட வேண்டும். பின்னர் கடாயில் 50 மில்லி தண்ணீர் விட்டு 75 கிராம் அளவு சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். இந்த பாகு ஒரு கம்பி பதம் வந்த உடன் அதை அதில் ஏற்கனவே வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். 

இதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது வதக்கிய பொருட்களில் பாதியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இது அனைத்தையும் ஒன்றாக கலந்து லட்டு பிடித்து கொள்ள வேண்டும்.

இந்த லட்டு மிகவும் ருசியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் உடலுக்கும் மிகவும் நல்லது.

இரத்த ஓட்டத்தை சீராக்கும். முடி வளர்ச்சி உதவும். சர்க்கர நோய் உள்ளவர்கள் மட்டும் இதை தவிர்ப்பது நல்லது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்